4 வயது சிறுவன் ரோகேஸ்வரன், இரண்டாவது முறையாக புற்றுநோயுடன் | Milaap
loans added to your basket
Total : 0
Pay Now

4 வயது சிறுவன் ரோகேஸ்வரன், இரண்டாவது முறையாக புற்றுநோயுடன் போராடி கொண்டிருக்கிறான்

4 வயதான ரோகேஸ்வரன் கடுமையான லுகேமியா, ஒரு வகையான இரத்த புற்று நோயால் பாதிக்கப்ட்டுள்ளான். துரதிருஷ்டவசமாக, மூன்று வருட சிகிச்சையைப் பெற்ற போதிலும், மீண்டும்  புற்று நோய் தாக்கியது. எலும்பு மஜ்ஜை மாற்று (BMT) சிகிச்சை  செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் .அவரது தந்தை, ஓட்டுநராக வேலை செய்கிறார். தனது மகனின் உயிரை காப்பாற்ற மிகவும் சிரமப்படுகிறார்.

 

அவன் பிறந்ததிலிருந்து அவனது வீட்டை விட  மருத்துவமனையில் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறான்

ரோகேஸ்வரன்  ஆரோக்கியமாக பிறந்தார். அவன் 2 வயதாக இருந்த போது கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவன் எடை குறைந்துகொன்டே போனது ஆனால் அதற்கு மாறாக அவனின் வயிறு பகுதி வளர்ந்துகொன்டே இருந்தது.
அவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் ஆறு மாத காலம்  தொடர்ச்சியான வலியும் வேதனையும் கடந்து , பல பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு புற்று நோய் இருப்பது உறுதியானது. நோய் கண்டறிந்த உடனேயே கீமோதெரபி ஆரம்பிக்கப்பட்டது. 3 ஆண்டுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு சிகிச்சை முடிவுபெற்றது.
 
ரோகேஸ்வரன் சந்தோஷமாக வீடு திரும்பினார். இருப்பினும் அந்த  மகிழ்ச்சி சிறிது காலம் தான் இருந்தது. திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் உருவானது. புற்று நோய் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிய வந்தது.

 
"நம் குழந்தை  எந்த நேரமானாலும் நம் கையை விட்டு போகும் என்ற எண்ணம் விட கொடுமையான ஒன்று எதுவும் இல்லை.  இது எங்களுக்கு மிகவும் துயரமான நேரம்”

 ரோகேஸ்வரன் புற்றுநோயால், எடை முழுவதும் குறைந்து மிகவும் பலவீனமாக உள்ளான்
 

BMT செய்தால் மட்டுமே உயிரை காப்பற்ற  முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரோகேஸ்வரனின் தாயார் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்த போது  அந்த குழந்தையின்  தொப்புள் கொடி ஸ்டெம் செல்ஸ் மூலம் காப்பாற்றலாம் என்ற ஒரு வாய்ப்பும் இருந்தது. ஆனால் பிறக்க இருக்கும்  தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாகவே  குழந்தை பிறந்தது. அதனால் ஸ்டெம் செல்ஸ்யை சேமிக்க முடியவில்லை. மூன்று வயதேயான அந்த குழந்தையின் ஸ்டெம் செல்ஸ்யை இப்போது பயன்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.ரோகேஸ்வரனின் இரண்டாவது  சகோதரியின் தொப்புள் கொடி ஸ்டெம் செல்ஸ்யை ஒரு வருடம் கழித்து தான் பயன்படுத்த முடியும் , ஆனால் அது வரைக்கும் சிகிச்சையை தொடராமல் இருப்பது இன்னும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும். ஒரு வருடம் காத்திருந்தால், அதுவரை எண்ணற்ற இரத்த மாற்றம், தினசரி மாத்திரைகள், அதை விட மிகுந்த வலியால் சிறுவன் துன்பப்படுவான்.

 
“எலும்பு மஜ்ஜை மாற்று  சிகிச்சை செய்தால்  அவன் ஆரோக்கியமான குழந்தையாக வளர்வான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அந்த நம்பிக்கையில்  தான் வாழ்கிறோம்”

நீங்களும் உதவலாம் 

 
ரோகேஸ்வரனின் தந்தை ஓட்டுனராக பணியாற்றுகிறார், மிகவும் குறைவான சம்பளத்திற்கு இரவும்  பகலும் வேலை பார்க்கிறார். அவர் தெரிந்த எல்லாரிடமும் உதவி கேட்டு இதுவரைக்கும் ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ரோகேஸ்வரனை காப்பாற்றுவதற்கு அது போதுமானதாக இருக்கும் என்று அவர் நினைத்தார். இப்போது  உதவி கேட்க யாரும் இல்லை.
 
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படும். அடிப்படையான செலவுகளை சமாளிப்பது கூட இப்போது கடினமாக இருக்கிறது . ரோகேஸ்வரனின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும்.  உங்கள் நன்கொடை மட்டுமே இந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியும்.


ஆதரவான ஆவணங்கள்
 இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்

ரோகேஸ்வரனை காப்பாற்ற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்