என் மகன் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறான் அவன் உயிரை | Milaap
loans added to your basket
Total : 0
Pay Now

என் மகன் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறான் அவன் உயிரை காப்பாற்ற உதவுங்கள்

என் பெயர் பாஸ்கர். என் மனைவி , இரண்டு மகன்கள் திவாகர் (14), லோகேஸ்வரன் (9) இவர்கள் தான் என்னுடைய பலம். என் பிள்ளைகளுக்கு  நல்ல படிப்பை தர வேண்டும் என்பது மட்டுமே என் லட்சியம். என் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். அவர்களுக்காக  இரவும் பகலும் உழைத்தேன். அதில் எனக்கு எந்த  வருத்தமும் இல்லை. அவர்களின் மகிழ்ச்சி தான் என்னுடைய மகிழ்ச்சி.ஆனால் மிகவும் கொடிய நோயாகிய புற்று நோய் எங்களின் எல்லா நம்பிக்கையையும் எடுத்து கொண்டது .என் மூத்த மகன் திவாகர் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். திடிரென்று அவனுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனது. மிகவும் சோர்வாக இருந்தான். சில நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்தேன் ஆனால் அவன் நிலை மிகவும் மோசமாகி கொண்டே  வந்தது. அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.ஏதோ வைரல் காய்ச்சலாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் மருத்துவர்கள் அவனுக்கு புற்று நோய் இருப்பதாக தெரிவித்தனர். அதிர்ச்சியில் உறைந்து போனேன், இதை கேட்ட என் மனைவி மயக்கமாகி விழுந்தார்.

என்னால் இன்னும் இதை ஏற்று கொள்ள முடியவில்லை.என் மகனிடம் சொல்வதற்கான தைரியம் என்னிடம் இல்லை. தொடர்ந்து மூன்று  வருடம் கீமோதெரபி தர வேண்டும். அவனின் அடுத்த மூன்று வருடம் முழுவதும் மருத்துவமனை தவிர வெளி உலகத்தை பார்க்க வாய்ப்பில்லை. அவனின் பள்ளி, படிப்பு, நண்பர்கள், வீடு என்று எல்லாவற்றிலும் இருந்து விலகி இருக்க போகிறான்.இன்னும் கொஞ்ச நாட்களில் வீட்டுக்கு போய்விடலாம் என்று எதிர்பார்க்கிறான். மூன்று வருடம் எப்படி சமாளிப்பது  என்று தெரியவில்லை. அவனின் நம்பிக்கை  கொஞ்சம் கொஞ்சமாக உடைவதை என்னால் சகித்து கொள்ள முடியவில்லை. கீமோதெரபி வலியை எப்படி தாங்கி கொள்ள போகிறான்? இதனால் அவனின் உடலில் ஏற்படும் மாற்றத்தை நினைத்தால் உடம்பெல்லாம் நடுங்குகிறது.

திவாகர் நன்றாக படிக்கச் கூடியவன், இந்த வயதிலும் குடும்ப சூழ்நிலையை அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வான். இது வரை அவன் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. அவன் தம்பியிடம் அவ்வப்போது சண்டைபோட்டாலும் அவனுக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வான். இப்போது அவன் என்னிடம் வீட்டுக்கு அழைத்து போக சொல்லி அழுகிறான். எதுவம் செய்யமுடியாமல் நிற்கிறேன்.இப்போது என்னிடம் எந்த கனவுகளும் ஆசையும் இல்லை. என் மகன் பிழைக்க வேண்டும். அவன் ஆரோக்கியமாக வாழ வேண்டும். கண்கள்  நிறைய கனவுகளுடன் இருந்த என் மகன் இன்று அவன் கண்கள் முழுவதும் பயம் தான் தெரிகிறது. என் மகனின் உயிர் ஆபத்தான நிலையில் உள்ளது ஆனால் என்னால் அவனுக்கு உதவ முடியவில்லை.

நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். என் குறைவான வருமானத்தை நம்பி தான் என் குடும்பம் இருக்கிறது.இதுவரைக்கும் மாத்திரகைகளுக்கும் ஊசிகளுக்கு மட்டுமே 1 லட்சம் செலவு செய்துள்ளேன். என்னிடம் விற்பதற்கு எதுவும் இல்லை.  

உங்களால் உதவ முடியும்

என் மகனின் சிகிச்சைக்கு 15 லட்சம் செலவாகும், ஒரு வருடம் முழுவதும் நான் வேலை செய்தாலும் என்னால் இந்த தொகையை செலுத்த முடியாது. என் இயலாமையால் என் மகன் என்னை விட்டு பிரிவதை என்னால் தாங்கி கொள்ள முடியாது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் அவனின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். உங்களின் உதவியால் என் மகனின் உயிரை காப்பாற்ற முடியும்.

உங்களின் நன்கொடை என் மகன் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தரும்!

ஆதரவான ஆவணங்கள்


இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.

சிறுவன் திவாகருக்கு  உதவ இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்