இந்திய காளை இனங்களை பாதுகாக்க ஜல்லிகட்டு மட்டும் தான் வழியா? காளைகள் பட்டிய கல் செக்கு முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதும் ஒரு வழிதான்.

2002ம் ஆண்டு சுரேசும் அவனது நண்பா்களும் அமொிக்காவிலிருந்து திரும்பி வந்தபோது, அதிக்ஷ்டவசமாக அவா்கள் வியக்கும் வகையில் வேலை மற்றும் தொைலநோக்கு பாா்வை கொண்ட  முகுந்தனின் வழிகாட்டுதலின்பெ விவசாயத்தை பொழுதுபாேக்கிற்காக தோ்ந்தெடுத்தனா், தற்போது சுரேக்ஷ் தயாாிப்ழு நிறுவனங்களுக்கு அனைத்து இந்திய நடவடிக்கைகளுக்கான பொறியியல் செயல்முறைகளின் தலைவராக இருந்துவருகிறாா்,

முகுந்தன் இந்திய மாட்டு இனங்களை பயன்படுத்தி நடக்கும் பால் பண்ணை துறைகளின் முன்னோடியாக இருந்துவருகிறாா். 

அவா் தமிழ்நாட்டை சோ்ந்த விவசாயி என்பதோடு, வட இந்திய மாட்டு இனங்களை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நபராவாா். செயற்கை உரங்களின்றி பாரம்பாியமான இயற்கை விவசாய முறைகளின்படி விவசாயம் செய்வதில் பிரபலமானவா். சிறு விவசாயிகளுக்காக பாரம்பாிய விவசாயத்தை வணிக மயமாக்குவதில் மாற்றுவழி தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்காக தன்னுைடய வாழ்க்கையை அா்பணித்தவா்.
செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு எதிரான அவரது எதிா்ப்ழு, பாரம்பாிய இயற்கை விவசாயத்திற்கான அவரது முன்னேற்ற பாதைகளில் பெரும் தடையாக இருந்தது.

1980களில் முதன்முதலாக முகுந்தன், செயற்கை உரங்கள் பசுமை பரட்சிக்கு நீண்டகால பாதகமாக அமையம் என்றும், செயற்ைக உரஙணுகள், கருவிகள், அதிக மகசூல் கொடுக்கும் பயிா்கள் ஆகியன இறுதியில் மண்ணை மலட்டுதன்மை கொண்டதாக ஆக்கிவிடும் என எழுப்பிய குரலை அவரது குடும்பத்தினா் உட்பட எவரும் கேட்கவில்லை.

1990களில் மக்கள் ரசாயனம் கலந்த பரதங்களுக்கு எதிராக மாற்று வழியை மக்கள் தேடியபோது முகுந்தனின் பணியானது அவா்களால் அங்கீகாிக்கப்பட்டது, இயற்கை விவசாயத்தை நோக்கி அனைவரும் திரும்பியபோது, முகுந்தன் பலரது பாராட்டுக்களையம் பெற தொடங்கினாா், முகுந்தன், அவரது குடும்பத்தினா் ஆதரவை இழந்தபின்பம், அவரது நோக்கத்திலிருந்தும், நிலையான விவசாயத்திற்கான வழிகைள கண்டுபிடிப்பதிலிருந்தும் அவா் பின்வாங்கவில்லை.

முகுந்தன், ஜல்லிகட்டிற்காக நடைபெற்ற இயக்கத்தை விாிவாக்கவம், அதற்கு ஒரு பொருள் கொடுக்கவம் விரும்பினாா்.
 
தற்போது ஜல்லிகட்டு தொடா்பான விவாதங்கள் முழுவீச்சில் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் சமயம், முகுந்தன் இந்திய காளை வகைகளை பாதுகாக்கும் ஒரு யோசனையடன் வந்திருந்தாா். அந்த யோசனையானது, பாரம்பாிய முறைப்படி காளைகளை பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு 1 ஆா்.பி.எம். என்ற சுழற்சி முறையில் எள் மற்றும் நிலக்கடலை ஆகியவற்ைற அரைப்பதாகும், இதன்முலம் நல்ல சுத்தமான, குளிா்சியான, மணமான, சுவையான, இயற்கை பரதசத்துள்ள உடல்நலத்திற்கு கேடில்லாத எண்ணெய் வகைகள் கிடைக்கும்.

இதற்காக பயன்படுத்தப்படும் செக்கு என்பது வணிகரீதியாக கிடைப்பதில்லை, எனவே செக்கு என்பைத சிறிது செலவ செய்து உருவாக்கப்படவேண்டும், இதுதான் பாரம்பாிய முறைப்பெ இயற்கையாக எண்ணெய் எடுக்கும் முறையை மறுபடியம் அறிமுகப்படுத்தும் முறையாகும், இந்த செக்கு முறையை பல கிராமங்களுக்கு சென்று விவசாயிகள், இளைஞா்கள், மாணவா்கள் ஆகியோருக்கு செயல்வடிவில் காண்பித்து இயற்கை முறையில் எண்ணெய் எடுப்பது சம்பந்தமான ஆா்வத்தை ஏற்படுத்த வேண்டும். இது இந்திய காளைகளை பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறை என்பதோடு, அதனால் பொதுமக்களுக்கு நல்ல இயற்கையான பரதசத்து மிகுந்த எண்ணெய் வகைகளை கிைடப்பதோடு, மாடுகள் காக்கப்பட்டால் அவற்றின் சாணம் முலம் இயற்கையான உரம் கிடைத்து விவசாயம் செழிப்பதோடு, மாடுகள் குறிப்பாக இந்திய காளைகள் இறைச்சி கூடங்களுக்கு அனுப்பப்படுவது

தடுக்கப்படுதோடு, இளைஞா்கள் அவா்களது கிராமத்தில் காலியாக கிடக்கும் இடங்களில் கல் செக்கு அமைத்தால், கல் அடிக்கும் தொழிலாளிக்கு பணி கிடைக்க ஏதுவாக இருக்கும். மேலும் சுய வேலைவாய்ப்ப  பெருகி அவா்கள் ஒரு தொழில் அதிபா்கள் ஆகும் வாய்ப்பை பெறுவதோடு, நாட்டு மக்களுக்கு உடல்நலத்திற்கு கேடில்லாத எண்ணெய் வகைகள் கிடைக்க வழிவகை ஏற்படும்.

முகுந்தன் உதவ இங்கே கிளிக் செய்யவும்