சிறுவனின் உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் தந்தைக்கு உதவுங்கள்

12 வயது யோகேஷ் , நோய்தடுப்புக்குறை என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (BMT) செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து  என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு , மிகவும் பலவீனமாக இருந்தான்

சுப்ரமணியன் - வசந்தி அவர்களின் மகன் யோகேஷ். அவனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.  அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு  படித்து கொண்டிருந்தான்.  திடிரென்று கடுமையான காய்ச்சல், சளி ஏற்பட்டது. இடை இழந்து எப்போதும் சோர்வாகவே காணப்பட்டான்.

ஒவ்வொரு முறையும் சாதாரண காயச்சல் தான் என்று மருந்துகள் மட்டுமே தரப்பட்டது. ஒரு கட்டத்தில் நிலைமை மிகவும் மோசமாக, டெங்கு காய்ச்சலாக இருக்கும் என்று எண்ணி சென்னை மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.ஆனால் அதை விட பெரிய அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.

இந்த நோயிற்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டும் தான் தீர்வு என்றனர்


யோகேஷிற்கு 'ஹீமோபாகோகிசைக் லிம்போஷிசோசைட்டோசிஸ்' (Hemophagocytic Lymphohistiocytosis) என்ற நோய்த்தடுப்புக்குறை நோய் கண்டறியப்பட்டது. ரத்த தட்டுக்கள் (பிளேட்லெட்) எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த நோய்க்கு ஒரே தீர்வு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சிகிச்சை முடிந்தவரை சீக்கிரமாக செய்யவேண்டும் இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் எச்சரித்தனர்.

“இவனுக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை  கேட்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு சில நாட்கள் ஆகின. உண்மையில்  நாங்கள் உடைந்து போனோம். அவன் வயதில் இருக்கும் மற்ற பிள்ளைகள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கும் போது, சுறுசுறுப்பாக  ஓடி  கொண்டிருந்த என் பையன் வலியால் சுருண்டு கிடப்பதை பார்க்க சக்தி இல்லாமல் இருக்கிறோம்"

இனி விற்பதற்க்கு ஏதுமில்லை, கடன் வாங்குவதற்கும் யாரும் இல்லை, என் மகனின் உயிரை காப்பற்ற வேண்டும்

சுப்ரமணியன் காரைக்காலில் தேங்காய் விற்கும் சிறிய கடை வைத்துள்ளார். இவரின் மாத வருமானம் சராசரியாக ருபாய் 5000  தான். இந்த குறைந்த வருமானத்தை சார்ந்து தான் இவர், இவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் யோகேஷ் மற்றும் கௌஷிகா உள்ளனர்.

இப்போது யோகேஷின் சிகிச்சைக்காக அவரின் வியாபாரத்தை விட்டுவிட்டு சென்னையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.தன் வயதுக்கு மீறிய பக்குவம் யோகேஷ் க்கு இருக்கிறது என்று அவனின் தாயார் வசந்தி கூறுகிறார். இத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு , அவன் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறான். அவன் சீக்கிரமாக குணமடைந்து , பள்ளிக்கு செல்வான் என்று நம்பிக்கையுடன் இருக்கிறான்.

“என்னிடம் விற்பதற்கு ஏதும் இல்லை, தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி  சமாளித்து வருகிறேன். இவன் படித்து நல்ல வேலைக்கு போய் குடும்பத்தை காப்பற்றுவான் என்று நினைத்தேன். ஆனால் இப்போது அவன் உயிரை காப்பற்றினால் மட்டும் போதும். என் மகனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்"

நீங்களும் உதவ முடியும்


யோகேஷிற்கு இன்னும் குறைந்தபட்சம் 6 மாதம் சிகிச்சை தொடர வேண்டும். இப்போது ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சை எடுத்து கொடிருக்கிறார்ன். BMT செய்வதற்கு குறைந்தபட்சம் 25லட்சம் தேவைப்படும். எந்த வருமானமும் இல்லாத நிலையில் இந்த தொகையை செலுத்துவது சாத்தியமற்றதாகும். உங்களின் நன்கொடை யோகேஷின் உயிரை காப்பற்ற பெரும் உதவியாக இருக்கும்.

ஆதரவான ஆவணங்கள்
இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.

சிறுவன் யோகேஷ்யை காப்பற்ற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்