மளிகை கடையை  விற்ற போதிலும், புற்று நோயால் பாதிக்கபட்ட  11 | Milaap
loans added to your basket
Total : 0
Pay Now

மளிகை கடையை  விற்ற போதிலும், புற்று நோயால் பாதிக்கபட்ட  11 வயதான சிறுவனை காப்பாற்ற தந்தை போராடுகிறார்

"திருச்சிராப்பள்ளி, பாலையார் கிராமத்தில் ஒரு முக்கில்  , மளிகை மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்களை விற்கும்  ஒரு சிறிய   கடை  நான் வைத்திருந்தேன். . எங்கள் மகனுக்கு   புற்றுநோயை எனக்  கண்டறிந்தபோது, அவரை நாங்கள்  இழக்ககூடாது  என்பதை உறுதிபடுத்திக்  கொண்டு,  நான் கண்ணீரும் வியர்வையும் சிந்தி உருவாக்கிய அந்த கடையுடன் சேர்த்து எல்லாவற்றையும் விற்றுவிட்டோம்",  - பிரேம் குமார், கடுமையான இரத்த புற்றுநோய்  கொண்ட 11 வயதான குஹன் குமாரின்  தந்தை.
  குஹனின்  பெற்றோர்களால்  இன்னும் தங்கள் குழந்தைக்கு  என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள  இயலவில்லை 

குஹனின் பெற்றோர்கள் தங்கள் செல்ல மகன்  வேகமாக எடை இழந்து  வந்ததை குறித்து  கவலை கொண்டனர் ; மருத்துவரை சந்தித்த பின் , அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் பேரதிர்ச்சியான செய்தி காத்திருந்தது 

 
குஹன் குமார் ஒரு சுறுசுறுப்பான மாணவனாக இருந்தான் , அவன் விளையாட்டு மற்றும் படிப்பு  இரண்டையுயம்  சமமாக நேசித்தான். அவனது பெற்றோர்களின் கூற்றுப்படி, அவனுக்கு உடல் ரீதியாக எந்த தொந்தரவும் இருந்தது இல்லை ,ஒரு வேலை காய்ச்சல் வந்தாலும் கூட, அவன் சீக்கிரம் குணமடைந்துவிடுவான்.. கடந்த ஆண்டு முதல்,அவனுடைய உடல் எடை அதிகமாக குறைந்தது.  அவனது பெற்றோர்கள்  அவனுக்கு  ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக நினைத்து , கடந்த மாதம் அவனை  ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டடிச்சென்றனர்.  
 
"குஹன் பள்ளியில்  நிறைய உடற்பயிற்சிகளை மேற்கொள்வான் , அதனால்  அவன் எடை இழக்கிறான்   என்று நாங்கள் நினைத்தோம்  , ஏனென்றால் அவன்  நல்ல உணவை சாப்பிடவில்லை, அதனால்  மருத்துவரிடம்   பரிசோதிக்க எண்ணினோம் . நாங்கள் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் மட்டும் தான் எழுதிக்கொடுப்பார்  என்று எதிர்பார்த்தோம் ; அவர்  'புற்றுநோய்' என்று சொன்னபோது  எங்களால்  அதை நம்ப முடியவில்லை. என் கண்ணீரை என்னால்கட்டுப்படுத்த முடியவில்லை .நாங்கள் டாக்டரின் அறையை விட்டு வெளியில் வந்தபோது குஹன் எனது சிவந்த கண்களையம் வீங்கிய முகத்தையும் கவனித்து  , என்ன தவறு நடந்துவிட்டது  என்று கேட்டான் . ஆனால் நான் ஒன்றும் நடக்காதது போல,தூசியினால் எனக்கு அல்ர்ஜி ஏற்பட்டதாக கூறினேன்  "- ரேவதி, குஹனின் தாய்.
 

ஒரு குறுகிய காலத்திற்குள் , திருச்சிராப்பள்ளியில் தங்கள் கிராமத்தில் இருந்து முழு குடும்பமும் சென்னைக்கு குடிபெயர நேர்ந்தது,  ஏனெனில் குஹனுக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டது

 
கடந்த மாதம்  குஹனுக்கு  கடுமையான இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அவனுக்கு உடனடியாக கீமோதெரபி சிகிச்சை  ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பிரேம்குமார் பாளையூர் கிராமத்திலிருந்த தனது சிறிய மளிகைக்  கடையை மூடிவிட்டு,   தனது குடும்பத்துடன் சென்னைக்கு செல்வதைத்  தவிர வேறு வழியில்லை.  
 
"எங்களால் நேரத்தை வீணடிக்க முடியாது ஏனெனில்,  அவனது புற்றுநோய் இதர உடல் உறுப்புகளுக்கும்  விரைவாக பரவ நேரிடும். எங்கள் மகனின் உயிரோடு   நாங்கள் விளையாட விரும்பவில்லை . அதனால், நான் என் அண்ணன் மற்றும் உறவினர்களிடமிருந்து கடனாக பெற்ற  சிறியத் தொகையையும் எடுத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டேன் . மெதுவாக இறந்துகொண்டிருக்கும் என் மகனைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்க என்னால் முடியவில்லை.  இத்தகைய சூழ்நிலைகள் எழும்பும்போது,  மேற்கொண்டு என்ன நடக்கபோகிறது என்று தெரியாமலிருந்தாலும் கூட ,நீங்கள் முடிவுகளை எடுக்க நிர்பந்திக்க படுகிறீர்கள்",-  பிரேம் குமார்  
 

குஹன் தனது கிராமத்திற்குத் திரும்பிச்   செல்ல வேண்டும் என்று  தினமும் அழுகிறான் , ஆனால் அவனுடைய தாய் மருத்துவமனையில் தங்கியிருப்பது அவனுடைய  எடையை  அதிகரித்து  ஆரோக்கியமாக இருப்பதற்காகத்  தான் என்று  அவனுக்கு ஆறுதல் கூறுகிறார் 

 
குஹன் தனது வாழ்நாளில், அவனுடைய கிராமம் மற்றும் நண்பர்களை இவ்வளவு நாட்கள்  பிரிந்து இருந்ததில்லை . மருத்துவமனை சூழலும், பெரியவர்களால் சூழப்பட்டிருப்பதும்   மட்டுமே அவனைக் கொன்றுகொண்டிருக்கிறது .சில நாட்கள் ,அவன் தூங்குவதற்கு அழுகிறான் ; அதேசமயம் சில நாட்கள் அவன்  அழகாக புரிந்துகொள்கிறான் .
 
“இதில் மிகவும் மோசமான பகுதி என்னவென்றால், குஹனின் முன்பு என் கண்ணீரை கட்டுப்படுத்துவது தான் .அவனை படுக்கையில் படுக்க வைப்பதற்கும்,மருத்துவமனையில் தங்க வைப்பதற்கும், நான் பல பொய்கள் கூறவேண்டியுள்ளது .தான் பெற்ற பிள்ளையிடமே பொய் கூறுவது  தாங்கொண்ணா துயரத்தை தருகிறது."
 
இந்த சிறிய குடும்பம்  மீண்டும் சந்தோஷமாக வாழ கடினமாக முயற்சி செய்கிறது


பிரேம் குமாரின் சிறிய மளிகை கடை மட்டும் தான் அந்த குடும்பத்தின் வாழ்வாதாரமாக திகழ்ந்தது, இப்பொழுது, அவர்களின் மகனை காப்பாற்ற அவர்களிடம் வேறு  எந்த வழியும் இல்லை
 

பிரேம் குமாரின் சிறிய மளிகை கடை மட்டும் தான் அந்த குடும்பத்தின் வாழ்வாதாரமாக திகழ்ந்தது. அவருக்கு அது எல்லாமாக இருந்தது, ஆனால் குடும்பத்தில்  திடீரென்று ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இன்று அது மூடப்பட்டுவிட்டது. ஆனால் பிரேம் குமார் கடையைப் பற்றி கவலைப்படவில்லை; அவரது ஒரே கவலை,  தனது மகனின் வளர்ந்து வரும் மருத்துவ செலவினங்களை ஈடு செய்ய போதுமான பணம் இல்லை, ஏனெனில் இப்போது அவருக்கு வேறு  எந்த வழியும் இல்லை.
 
 
''அந்த கடை சிறியதாக இருந்தாலும்  அது என் வாழ்வாதாரமாக இருந்தது . இப்பொழுது அது இல்லை . எனக்கு அது வருத்தமாக  இருந்தாலும் , என்னுடைய மகன் குஹனுக்கு உதவ முடியாமலிருப்பது பயமாக உள்ளது. அவனது சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு  நிறைய பணம் செலவாகும். அவன் நலம் பெற வேண்டும் - இதை மட்டுமே நான் இப்பொழுது நினைத்துக்கொண்டிருக்கிறேன் ,"- பிரேம் குமார் .
 

நீங்கள் எப்படி உதவ முடியும்

 
ஏற்கனவே , குஹனின் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் வரை  பிரேம் குமார் கடன் வாங்கி செலவுசெய்துள்ளார் .குஹன்  புற்றுநோயைத் தோற்கடிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும்,மேம்பட்ட கீமோதெரபி சிகிச்சை தேவைப்படுகிறது, ஆனால் அவரது தந்தை ஏற்கனவே தனது தகுதிக்கும் மீறி செலவு செய்துவிட்டு ,அவரின்   சட்டைப்பைகளை  தொளையிட்டுக்கொண்டுள்ளார். குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டிருந்தாலும், சென்னையில் ஒரு வாடகை அறையில் தங்குவதற்கு மட்டுமே அந்த குடும்பம் மாதம் ரூபாய் 12000 கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது .அவனது மருந்துகள் மற்றும் ஊசிகளுக்காக மட்டுமே  கூடுதல் பணம் செலவாகின்றது, இந்த செலவுகளை நிர்வகிப்பது என்பது   பிரேம் குமாருக்கு  கிட்டத்தட்ட சாத்தியமில்லாதது. குஹனின் பெற்றோர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு ,தங்கள்  உணவிற்கான பணத்தைக்  கூட சேமிக்கிறார்கள்,  ஏனென்றால் மிகக் குறைவான அளவு சேமித்த பணம்  கூட இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.
 
"என்  மகன் உயிர் பிழைக்க வேண்டும் என்று  நான்  விரும்புகிறேன், ஆனால் இப்போது அதை சாத்தியமாக்கக்  கூடிய ரூபாய் 15 லட்சம்  என்னிடம் இல்லை   .  இது ஒரு சோகமான  சூழ்நிலை  . நான் அவனை காப்பாற்றுவதற்காக  பணம் சம்பாதிக்கும் வரை என் மகனுக்கு எதுவும் நடந்து விடாது  என்று நம்புகிறேன். நான் உதவி என்று  கேட்க யாரும் இல்லை ... நான் தோற்றுவிட்டேன் . நான் சென்னையில் வேலைக்கு போக முடியாது, ஏனெனில் நான் குஹனுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும்,  அவனின் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் ", -  பிரேம் குமார் .
 

உங்களின்  சிறிய பங்களிப்பு குஹன் குமாரை  காப்பாற்ற உதவும்

Supporting Document  The specifics of this case have been verified by the medical team at the concerned hospital. For any clarification on the treatment or associated costs, contact the campaign organizer or the medical team.
 
 Click here to save 11-year-old Guhan