இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 4 மாத குழந்தையின் உயிரை | Milaap
loans added to your basket
Total : 0
Pay Now

இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 4 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி கொண்டிருக்கும் தந்தைக்கு உதவுங்கள்

சக்திவேல் - லட்சுமியின் ஒரே மகள் ப்ரவீணா. பிறந்து  4 மாதமேயான நிலையில், குழந்தை ப்ரவீணாவிற்கு  இருதய  நோய் இருப்பதை கேட்டு இடிந்து போயுள்ளனர்.

இருதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பது தெரியவந்தது

மிகவும்   சிரமமான  பிரசவத்திற்கு  பிறகே ப்ரவீணா பிறந்தாள். அதிர்ஷ்டவசமாக  குழந்தை ஆரோக்கியமாக பிறந்திருக்கிறாள் என்பதை  கேட்டு  இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால்  அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள்  நீடிக்கவில்லை. 1 மாத குழந்தையாக இருந்த போது ப்ரவீணாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடம்பு முழுவதும் வியர்த்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.பல பரிசோதனைகளுக்கு பிறகு ப்ரவீணாவிற்கு இருதயத்தில் ஓட்டை இருப்பது உறுதியானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்கான தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் அவதியுற்றனர்.

அறுவை சிகிச்சை செய்தால்  நிச்சயம் குழந்தையின் உயிரை காப்பாற்ற  முடியும் என்றும் இருதய பிரச்சனையிலிருந்து முழுவதுமாக விடுபடலாம் என்றும் மருத்துவர்கள் உறுதியளித்தனர். சக்திவேல் தன் குழந்தையை காப்பாற்ற தனக்கு தெரிந்தர்வர்கள் பலரிடம் கடன் வாங்கினார்.

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சில சிக்கல்கள் ஏற்பட்டது

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அறுவை சிகிச்சைக்கு பிறகு மேலும் சில பாதிப்புகள் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் ICU யில் சேர்க்கப்பட்டாள். மூச்சு திணறல் இன்னும் நிற்கவில்லை, கடந்த மூன்று மாதமாக வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சுவாசிக்கிறாள். குழந்தை ப்ரவீணா முழுவதுமாக குணமடைய இன்னும் சில நாட்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“பிறந்த குழந்தை மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படுவதை பார்க்க எங்களால் முடியவில்லை. எத்தனையோ கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறேன், ஆனால் இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த பெற்றோருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது" என்கிறார் லட்சுமி

ப்ரவீணாவின் தாயார் லட்சுமி  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்


இதற்கிடையில் தன் குழந்தையின் உடல்நிலையை நினைத்து , மிகவும் வருந்தி, சரியான உணவில்லாமல் லட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
சக்திவேல் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வடைந்து இருக்கிறார்.   சக்திவேல் கொத்தனராக பணிபுரிகிறார். இப்போது சிகிச்சை காரணமாக வேலைக்கு போக இயலாமல் தன் மனைவியும் குழந்தையையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்கிறார்.

"ப்ரவீணா எங்களின் ஒரே மகள், இவளுக்கு நல்ல வாழ்க்கையை  அமைத்து தர வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கனவாக இருந்தது. இப்போது அவள் உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறோம். பணம் இல்லாததால் சிகிச்சையை மேற்கொள்ளாமல் போனால் அதை  விட கொடூர  நிலை  எதுவும் இல்லை, அந்த குற்ற உணர்ச்சியை தாங்கி கொள்ள முடியாது" என்கிறார் சக்திவேல்.

உங்களால் உதவ முடியும்

ப்ரவீணா முழுவதுமாக குணமடையும் வரை ICU வில் தான் வைக்கப்படுவாள். இதற்கு இன்னும் 1௦ லட்சம் வரை செலவாகவும். ஏற்கனவே சிகிச்சைக்காக 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார் சக்திவேல். இப்போது வருமானமும் இல்லாத நிலையில் 10 லட்சம் என்பது அவரின் சக்திற்கு அப்பாற்பட்டது. தன் 4 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். உங்கள் நன்கொடைகள் அவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஆதரவான ஆவணங்கள்


இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.

குழந்தை ப்ரவீணாவை காப்பாற்ற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்