"போன வாரம் பள்ளியில் நடந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் தான் என் ஐந்து வயது மகனுக்கு இருதய பிரச்சனை இருப்பது தெரியவந்தது. மற்ற பசங்களை காட்டிலும் கொஞ்சம் சோர்வாக தான் இருப்பான், அடிக்கடி சளியால் மிகவும் சிரமப்படுவான், ஒவ்வொரு முறையும் காய்ச்சல் வரும்போது மருத்துவமனைக்கு கூட்டி சென்று மாத்திரை வாங்கி தந்தோம். ஆனால் ஒரு முறை கூட முழு உடல் பரிசோதனை செய்ததில்லை. இத்தனை வருடமாக இருதய பிரச்சனையால் அவதிப்பட்டிருக்கிறான் என்பதை தாங்கி கொள்ள முடியவில்லை. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவனை காப்பாற்ற முடியாது என்றனர் மருத்துவர்கள். ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன்" - கண்ணகி, அன்பரசினின் தாய்.

அன்பரசனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவனின் உடல் நிலை மேலும் மோசமடைந்து உயிருக்கு பாதிப்பு ஏற்படும்
அன்பரசனின் சித்தியின் கட்டாயத்தால் அவனையும் அவனின் சகோதரி சங்கீதாவையும் பள்ளியில் சேர்த்தனர். அன்பரசனின் மற்ற மூன்று சகோதர்கள் யாரும் பள்ளிக்கு சென்றதில்லை. தங்களின் செல்ல மகன் அன்பரசனின் எதிர்காலத்தின் மீது வைத்திருந்த அத்தனை கனவுகளும் இப்போது சிதைந்துவிட்டது. சிறுவன் அன்பரசனுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். நாட்கள் செல்ல செல்ல மேலும் சோர்வடைந்து , மூச்சு விடவே சிரமப்படுகிறான்.
"என் மகனுக்கு இதயத்தில் பெரிய ஓட்டை இருப்பதாகக் மருத்துவர்கள் சொன்னார்கள். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்கின்றான் ஆனால் என்னிடம் எதற்கும் பதில் இல்லை. கொஞ்சம் தூரம் நடந்தால் கூட மூச்சுதிணறல் ஏற்படுகிறது. இனிமேல் சொல்வதெல்லாம் கேட்கிறேன், வீட்டுக்கு போகணும் என்று தினமும் அழுகிறான். "

ஒரு நாளின் வருமானம் 100 ருபாய் மட்டுமே , இந்த குறைந்த வருமானத்தை நம்பி தான் கிருஷ்ணனின் குடும்பம் உள்ளது
அன்பரசனின் தந்தை கிருஷ்ணன் ஊரூராக பிளாஸ்டிக் குடம் விற்பவர். அவர்களுக்கென்று நிரந்திரமான ஊரோ வீடோ இதுவரை இருந்ததில்லை. கடந்த ஒரு வருடமாக அன்பரசன் மற்றும் அவனின் சகோதரியின் படிப்புக்காக குளித்தலை அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர். கண்ணகியின் எல்லா பிரசவவமும் வீட்டில் நடந்ததால் அவரின் குழந்தைகள் யாருக்கும் எந்த அடையாள அட்டையும் இல்லை.
"நாங்கள் இருவரும் படிக்கவில்லை. எங்களுக்கு வெளி உலகம் எதுவும் தெரியாது. ஒரு நாளைக்கு 100 -150 ருபாய் வருமானம் வரும், அதில் தான் குடும்பம் நடத்தி வந்தோம். சென்னை ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு கூட கடன் வாங்கி கொண்டு தான் வந்தோம். மருத்துவ காப்பிட்டு அட்டை வாங்குவதற்கு ரேஷன் அட்டை வேண்டும் என்று சொன்னார்கள், எங்களிடம் ரேஷன் அட்டை கூடயில்லை. அறுவை சிகிச்சைக்கு 2.5 லட்சம் தேவைப்படுகிறது, வாழ்நாள் முழுவதும் உழைத்தால் கூட எங்களால் இத்தனை பெரிய தொகையை நினைத்து கூட பார்க்க முடியாது" - கண்ணகி.

அன்பரசனுக்கு தேவையான மாத்திரைகள் வாங்குவதற்கு கூட தன்னுடைய உறவினர்கள் தான் உதவுகின்றனர். கண்ணகி இப்போது சாப்பிடுவது கூட இல்லை, ஒவ்வொரு ரூபாயும் மகனின் சிகிச்சைக்காக சேமித்து வைக்கிறார் ஆனால் அது எதுவுமே போதுமானதாக இல்லை.
"எல்லா கஷ்டங்களையும் குழந்தைகளுக்குகாக தான் பொறுத்து கொண்டோம், ஆனால் என் குழந்தையே என்னால் காப்பற்ற முடியவில்லை என்பதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. என் மகனை காப்பாற்ற உதவுங்கள்"

உங்களால் உதவ முடியும்
கிருஷ்ணன்- கண்ணகியின் ஐந்து வயது மகன் அன்பரசன் இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளான். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு பாதிப்பு ஏற்பட கூடும். அடிப்படை வசதிகளுக்கு கூட கிருஷ்ணனின் வருமானம் போதுமானதாக இல்லை. உங்களின் உதவியால் மட்டும் தான் அவர்களால் அன்பரசனை காப்பாற்ற முடியும்.உங்களின் பங்களிப்பு சிறுவன் அன்பரசனை காப்பாற்ற உதவும்