லக்ஷ்மியின் குழந்தையை காப்பற்ற உதவுங்கள் | Milaap
லக்ஷ்மியின் குழந்தையை காப்பற்ற உதவுங்கள்
  • Sangeeta

    Created by

    Sangeeta
  • Bo

    This fundraiser will benefit

    Baby of lakshmi

    from Chennai, Tamil Nadu

Tax benefits for INR donations will be issued by Kanchi Kamakoti CHILDS Trust Hospital (The CHILDS Trust

10 வருடத்திற்கு பிறகு குழந்தை பெறும்  பாக்கியம் பெற்றதால் முனியாண்டியும் லக்ஷ்மியும் மகிழ்ச்சியாக இருந்தனர் அதிலும் மருத்துவர்கள் இரட்டை குழந்தை என்றதும் அவர்களின் மகிழ்ச்சியும் இரட்டிப்பானது. மருத்துவர்கள் கூறிய எல்லாவற்றையும் பின்பற்றியும் துரதிருஷ்டவசமாக 25 வாரத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  முதன்முறையாக குழந்தையின்  அழு குரல் கேட்டபோது தான் முனியாண்டிக்கு மீண்டும் உயிர் வந்தது போல் இருந்தது ஆனால் மற்றொரு குழந்தை இறந்து பிறந்ததால் மனமுடைந்து  போனார்.

குழந்தையின் உயிரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

லக்ஷ்மியின் முதல் குழந்தை , பிறந்த சில நிமிடங்களிலேயே NICU ல் வைக்கப்பட்டன. லக்ஷ்மியின் குழந்தை பிறந்து 1  வாரமாகிறது ஆனால் இந்த நொடி வரை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒருமுறை கூட குழந்தையை தூக்க வாய்ப்பு கிடைக்காமல் இருவரும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையில்  இருக்கின்றனர்.
 
"உடல் முழுவதும் டூப்யுடன் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. குழந்தைக்கு ரத்தம் குறைவாக இருப்பதால் தினமும் ரத்தம் தருகிறார்கள். அந்த பிஞ்சு உடலில் ஊசி குத்தாத இடமேயில்லை. ஒரு சொட்டு பால் தான் டூப் மூலம் மருத்துவர்கள் தருகிறர்கள். இந்த குழந்தையையும் கடவுள் பறித்துக்   கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில் தான் நான் இன்னும் என் உயிரை கையில் பிடித்து இருக்கிறேன்."

மேலும் 4- 6 வாரம் சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உயிரை காப்பற்ற முடியும்

லக்ஷ்மியின் குழந்தையின் எடை வெறும் 570 கிராம். குழந்தைக்கு சுவாச பிரச்சனை மற்றும்  செப்சிஸ் (சீழ்ப்பிடிப்பு) எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இது  ரத்த நச்சு காரணமாக, பாக்டீரியா அல்லது வைரஸ் ஏற்படுகின்ற ஓர் தீவிர நோய். குழந்தையின் உடல் நிலை முன்னேறிக்கொண்டு வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் ஆனால் மேலும் 4 -6 வாரம் சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தை பிழைப்பதற்கான  வாய்ப்புகள் உள்ளது.

"இரண்டு  நாட்களுக்கு பிறகு தான் ஒரு குழந்தை இறந்தே பிறந்த செய்தி  என் மனைவிக்கு தெரியவந்தது. இருவரும் கதறி அழுதோம், மற்றொரு குழநதையும் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை அவர்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. இந்த குழந்தையும் காப்பாற்ற முடியாமல் போய்விடுமா என்ற பயம் ஒவ்வொரு நொடியும் எங்களை கொல்கிறது. எங்களின் இயலாமை குற்றவுணர்வை தருகிறது."

சிகிச்சைக்காக எல்லாவற்றையும் விற்றதோடு கடனும் வாங்கியுள்ளார், இருப்பினும் அது போதவில்லை

முனியாண்டி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வருகிறார். மழை காலத்தில் வேலை கிடைப்பது சிரமம் . வேலை இருக்கும் நேரத்தில் ஒரு நாளைக்கு 450 கிடைக்கும். இந்த குறைவான வருமானத்தில் தான் குடும்பத்தை கவனித்துக்கொண்டார். தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்ற தெரிந்த நாளிலிருந்து தன்னால் முடிந்த வரை ஏதோ ஒரு வேலையை செய்து ஒவ்வொரு ரூபாயையும் சேமித்து வைத்தார்.குழந்தைக்காக சேர்த்து வைத்த எல்லாவற்றையும் அவனின் சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டார். இருப்பினும் அது போதவில்லை.



"என் மனைவியின் உடல் நிலை இன்னும் சரியாகவில்லை,ஆனால் அதை பற்றி எதுவும் என்னிடம் சொல்வதில்லை. அவர் வலியால் தவிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று அழுது கொண்டே  இருக்கிறார். நாங்கள் மருத்துவமனை தாழ்வாரத்திலே படுத்து கொள்கிறோம். சில நேரம் சாப்பிடுவது கூட இல்லை. தெரிந்த எல்லாரிடமும் கடன் வாங்கியுள்ளோம். இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. சிகிச்சைக்கு 5  லட்சம் தேவைப்படுகிறது , வருடம் முழுவதும் உழைத்தாலும் என்னால்  அவ்வளவு பெரிய  தொகையை பார்க்க முடியாது. குழந்தை இல்லாமல் வெறுமையாக வீட்டுக்கு போவதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை."

நீங்கள் உதவ முடியும்

லட்சுமி - முனியாண்டியின் குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. ஒரு குழந்தையை இழந்த சோகத்தால் மிகுந்த மன வேதனையில் இருக்கின்றனர்.  இந்த குழந்தையை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தும் அவர்களால் சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியவில்லை. சிகிச்சை இல்லாமல் குழந்தையின் நிலை மேலும் மோசமாகி உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். உங்களின் உதவிக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

உங்களின் பங்களிப்பு இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும்

Read More

Know someone in need of funds? Refer to us
support