"ஏழாம் மாத ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தைக்கு இதய நோய் இருக்கிறது என்று தெரிய வந்தது. கரு கலைத்திட சொல்லி சுற்றியிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை செய்ய எங்களுக்கு மனசு இல்லை. திருமணமாகி இந்த 5 வருடத்தில், குழந்தை வரன் வேண்டி நாங்கள் போகாத கோவில் இல்லை. எப்படியாவது குழந்தையை காப்பாற்றி கொடுங்கள் என்று மருத்துவர்களிடம் கெஞ்சினோம். பிறந்த பிறகு அறுவை சிகிச்சை செய்தால் குணமாகி விடும் என்றார்கள். அந்த நம்பிக்கையில் தான் பெற்றெடுத்தேன். இப்போ 7 மாதம் ஆகிவிட்டது ஆனால் இன்னும் எங்களால் இந்த நோயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. " சுகன்யா

"அவளின் ஒவ்வொரு அசைவும் , சிரிப்பும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தது"
இதய நோய் பற்றி தெரிந்த நாளிலிருந்து சுகன்யா - ஐயப்பன் தம்பதினர்க்கு பயம் தொற்றிக்கொண்டது. குழந்தை பிறக்கும் முன்பே அவர்களை விட்டு போய்விடுமா என்று பயந்தனர். ஆனால் குழந்தை கவிநயா , இதய நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமால் பிறந்தாள். ஆரோக்கியமாகவே காணப்பட்டாள், எந்த சோர்வும் இல்லாமல், மற்ற குழந்தைகள் போலவே இருந்தாள். மருத்துவர்கள், குழந்தையின் உடல் நீலமாக மாறினால் உடனே அழைத்து வாங்கள் என்றார்கள்.
"5 மாதம் வரை அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவளின் சிரிப்பு, பல நாட்கள் இந்த நோயை பற்றிய கவலை மறக்க செய்தது . ஆனால் திடிரென்று ஒரு நாள் பால் குடிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு, உடல் முழுவதும் நீலமாக மாறியது. அன்றைக்கு தன் இந்த நோயின் தீவிரத்தை தெரிந்து கொண்டோம். " - சுகன்யா

இதய அறுவை சிகிச்சை மட்டும் தான் , குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு
கவிநயாவிற்கு 7 மாதம் ஆகிறது, மற்ற குழந்தைகளை போல அவளால் உட்கார முடிகிறது, பிடித்துக்கொண்டு நிற்க முடிகிறது. மற்ற குழந்தைகள் போலவே இருக்கிறாள். ஆனால் ஒவ்வொரு முறையும் மூச்சு திணறல் ஏற்படும் போது, மிகவும் சிரமப்படுகிறாள், உடல் முழுவதும் நீலமாக மாறுகிறது. 5 நிமிடத்திற்கு மேல் பால் குடிக்க முடியவில்லை. அவளின் எடையும் குறைந்து கொண்டு வருகிறது.
"எங்களின் பிராத்தனை தான் குழந்தையை காப்பாற்றி வருகிறது. ஒவ்வொரு நாளும் கடவுள் எங்கள் மீது காட்டும் கருணையாக நினைக்கிறோம். இதய அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் , ஆனால் அதற்கான வசதி எங்களிடம் இல்லை."

"300 ருபாய் சம்பளத்தில் , 3 வேலை சாப்பாடு கூட சிரமம்தான், எப்படி சிகிச்சைக்கு பணம் கட்ட முடியும்?"
ஐயப்பன் , சிவகங்கை மாவட்டத்தில் , கூலி விவசாயியாக இருக்கிறார். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் கிடைக்கும். கவிநயாவின் அறுவை சிகிச்சைக்காக, கிடைக்கும் எல்லாம் வேலைக்கும் போகிறார். இருபின்னும் 2,50,000 என்பது அவரின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. தெரியாதவர்கள் எல்லாரிடமும் கடன் வாங்கியும் எதுவும் போதுமானதாக இல்லை,
"நாட்கள் ஓடிக்கொன்டே இருக்கிறது, எங்களுக்கு இருப்பது ஒரே குழந்தை ஆனால் அவளை காப்பாற்றுவதற்கு எங்களால் முடியவில்லை, மகளின் சிரிப்பை பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. என் மகளை காப்பாற்ற உதவுங்கள் " - ஐயப்பன்.

உங்களால் உதவி செய்ய முடியும்
7 மாத குழந்தை கவிநயா இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். 5 வருட காத்திருப்பு பிறகு பிறந்த தங்களின் ஆசை மகளை காப்பற்ற , தினம் தினம் போராடி கொண்டிருக்கும் இந்த ஏழை பெற்றோர்களுக்கு உங்களின் உதவி வேண்டும். உங்களின் பங்களிப்பு இந்த குழந்தை ஆரோக்கியமாக வளர உதவி செய்யும்.உங்களின் பங்களிப்பு 7 மாத குழ்நதையின் உயிரை காப்பாற்ற உதவும்
ஆதாரமான ஆவணங்கள்
