கல்லீரல் அறுவை சிகிச்சை மட்டும் தான் இந்த 2 வயது சிறுமியின் | Milaap
loans added to your basket
Total : 0
Pay Now

கல்லீரல் அறுவை சிகிச்சை மட்டும் தான் இந்த 2 வயது சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியும்

2  வயது சிறுமி ஜோஷ்னா, தன்னுடைய இரண்டாவது மாதத்திலிருந்து வலியை தவிர வேறு  எதையும் அறிந்திருக்கவில்லை. மிகவும் கொடிய, ஒரு வகையான கல்லீரல் நோயால் பாதிக்கபட்டிருக்கிறாள். உடனடியாக  கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, வலியில் அழுது கொண்டே இருக்கிறாள்

சிறுமி ஜோஷ்னா ஆரோக்கியமாகவே பிறந்தாள். ஆனால் பிறந்து இரண்டாவது மாதத்தில் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தது. திடிரென்று  அவளின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியது. பதறி போய் அவளின் அம்மா தெரேசா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவளை பரிசோதித்த டாக்டர் சிறுமிக்கு கல்லீரல் நோய் இருப்பதாக தெரிவித்தார். இதை கேட்ட தெரேசா மிகவும் மனமுடைந்து போனார். இன்று வரை அதற்கான தீர்வாக ஏராளாமான மருந்துகள், ஊசிகள் எடுத்து கொண்டிருக்கிறாள்.

கடந்த சில மாதங்களாக அவளின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. ரத்தம் வரும் அளவிற்கு சொரிந்து கொண்டே இருக்கிறாள். தாங்க முடியாத வலியால் தூங்க முடியவில்லை. சாப்பிடாமல், தூங்காமல் வலியில் அழுது கொண்டே  இருக்கிறாள்.நோயின் தன்மை அதிகரித்து கொண்டே போகிறது

"அவள் வலியில் அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ரத்தம் வரும் போதும். என் நெஞ்சு அடைப்பது போல இருக்கும். கல்லீரல் அறுவை சிகிச்சை மட்டும் தான் இதற்கு தீர்வு ஆனால் நான் எதுவும் செய்ய முடியாத, உதவியற்ற நிலையில் இருக்கிறேன்."-  தெரேசா.
தெரேசா கடந்து வந்த பாதை மிகவும் வேதனையானது. தெரேசாவிற்கு இரண்டு பிள்ளைகள், விஜய் (9), ஜோஷ்னா (2). ஜோஷ்னா வயிற்றில் இருக்கும் போது தன் கணவன் தன்னையும் தன் பிள்ளைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இது வரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை. தெரேசாவின் பெற்றோர்கள் தான் தன்னையும் தன் பிள்ளைகளையும் பார்த்து கொள்கிறார்.

தெரேசா தன் அம்மா  மற்றும் சிறுமி ஜோஷ்னாவுடன்


"என் அப்பாவிற்கு 58 வயது, இந்த வயதிலும் வேலை பார்த்து என்னையும் என் பிள்ளைகளையும் பார்த்து கொள்கிறார். நான் 10ம் வகுப்பு வரை தான் படித்தேன். என்னால் என் மகளை காப்பற்ற எதுவும் செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியே என்னை கொல்கிறது. "

ஒவ்வொரு முறை ரத்த பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வாங்குவதற்கு 3000 ருபாய் வரை செலவாகிறது. வாரம் இரண்டு  முறை மருத்துவமனைக்கு செல்கிறார். தன் அப்பாவின் வருமானத்தை நம்பி தான் இருக்கிறர்கள்.

சிகிச்சைக்கு மிகவும் குறைவான நேரம் தான் உள்ளது

மிகவும் குறைவான நேரம் தான் அவர்களின் கையில் உள்ளது. சிறுமி ஜோஷ்னாவின் உடல் நிலை மோசமாகி கொன்டே வருகிறது. மாத்திரைகள் கூட வலியை சரிசெய்ய முடியவில்லை.அறுவை சிகிச்சை தான் அவளை காப்பாற்ற உதவும்.

சிறுமி ஜோஷ்னாவிற்கு  கல்லீரல் மாற்று சிகிச்சை உடனடியாக தேவை

நீங்கள் உதவு முடியும்!

தெரேசா தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி தான் மாத்திரைகள்.  வாங்குகிறார். அவருடைய எல்லா சேமிப்பும் செலவாகி விட்டது. விற்பதற்கு என்று எதுவும் இல்லை.   சிகிச்சைக்கு இன்னும் 2  லட்சம் தேவைப்படுகிறது, இது அவர்களின் சக்திக்கு மீறிய தொகை. சிறுமியின் உயிரை காப்பாற்றுவதற்கு , உங்களின் நன்கொடை பெரும் உதவியாக இருக்கும்.

ஆதரவான ஆவணங்கள்

இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.சிறுமி ஜோஷ்னாவிற்கு  உதவ இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

சிறுமி ஜோஷ்னாவிற்கு  உதவ இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்