Help This 7-month-old Baby Boy Who Was Born With A Heart | Milaap
Help This 7-month-old Baby Boy Who Was Born With A Heart Defect
  • LM

    Created by

    Little Moppet Heart Foundation
  • R

    This fundraiser will benefit

    Revin

    from Theni, Tamil Nadu

Story

இன்னும் 5  மாதங்களில் குழந்தை ரெவின் தன்  முதலாம் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறான். இந்த வயதுடைய குழந்தைகளின் மற்ற பெற்றோர்களுக்கு  அவர்களின்  முதல் பிறந்தநாள் குறித்தும்  எதிர்காலத்தை குறித்தும் அத்தனை கனவுகளும் திட்டங்களும் இருக்கும். ஆனால் ரெவினின் பெற்றோருக்கு முதல் பிறந்தநாளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கம். திருமணமாகி 4 வருடங்கள் பிறந்த தங்களுடைய செல்ல மகனை காப்பாற்ற தவறிவிடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்கின்றனர்.

"நாங்கள் கர்ப்ப கால பரிசோதனைகள் எல்லாவற்றையும் மேற்கொண்டோம்"

கவிதாவின் கர்ப்பம் உறுதியான நாளில் இருந்தே மிகுந்த கவனத்துடன் இருந்தார். மருத்துவர்கள் தெரிவித்த எல்லா பரிசோதனைகளும் செய்தனர். கடவுளின் ஆசிர்வாதத்தால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நிம்மதியாக இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது. உண்மையில் குழந்தையின் இதயத்தில் இருக்கும் பிரச்சனை அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.



"5 மாதம் வரை என் மகன் நன்றாகவே இருந்தான். ஆனால் திடிரென்று ஒரு நாள் காய்ச்சல் சளி வந்தது. சாதாரணமாக தான் எடுத்து கொண்டோம்.  ஆனால் ஒரு நாள்,மூச்சு திணறல் ஏற்பட்டு உடம்பு முழுவதும் நீல நிறமாக மாறியது. அதை நினைத்து பார்த்தால் இப்போ கூட உடலெல்லாம் நடுங்குகிறது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினோம்"


"இதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்று சொன்னார்கள் "

ரெவினை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்தார்கள் மேலும் நுரையீரலுக்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு போதுமான எடையில் ரெவின் இல்லை. தொடர் காய்ச்சலால் எடை குறைந்து மிகவும் சோர்வாக இருக்கிறான். 5 நிமிடம் பால் குடித்தால் கூட மூச்சு திணறல் ஏற்படுகிறது.



"ஒவ்வொரு நாளும் அவன் அவதிப்படுவதை எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. பிறக்கும்போது இருந்தே இருந்த நோய் 5 மாதமாக எங்களுக்கு தெரியவில்லை என்பது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. என் மனைவி குழந்தையை விட்டு ஒரு நிமிடம் கூட நகர்வதில்லை. எங்களால் முடிந்தது எல்லாவற்றையும் செய்கிறோம். "

"என்னுடைய வருமானம் அடிப்படை  தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது "

ரெவினின் அப்பா பொம்மியசாமி கம்பம், தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவரின் வருமானம் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. தன்னிடம் இருந்த குறைந்த சேமிப்பும், மாத்திரைகளுக்கு, பரிசோதனைகளுக்கும் செலவாகிவிட்டது.  ரெவினின் அறுவை சிகிச்சைக்கு தினம் தினம் நண்பர்களிடம் உதவி கேட்கிறார். ஆனால் அது எதுவும் போதுமானதாக இல்லை.

"சிகிச்சைக்கு 3 லட்சம் ருபாய் தேவை, என்னிடம் சில ஆயிரங்கள் மட்டும் தான் இருக்கிறது. என் மகன் தான் என்னுடைய உலகம், அவனை காப்பாற்ற உதவுங்கள்"

உங்களால் உதவ முடியும்

7 மாத குழந்தை ரெவின் இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும். பொம்மியசாமி , கவிதா அவர்களின் ஒரே மகனை காப்பாற்ற, உங்களின் உதவி தேவை.

உங்களால் குழந்தை ரெவினின் உயிரை காப்பாற்ற முடியும்

Read More

Know someone in need of funds? Refer to us
support