உதயகுமாரும் சிவகாமியும் திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை வரனுக்காக காத்திருந்தனர். சிவகாமி கற்பமானபோது மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மற்ற பெற்றோர்களை போல் , இவர்களும் பிறக்கயிருக்கும் குழந்தையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருந்தனர். மூன்று வருட காத்திருப்பு பிறகு கிடைத்த வரன் என்பதால் மிகவும் கவனமாக இருந்தனர். ஆனால் ஏழாவது மாதம் ஸ்கேன் ரிப்போர்ட்யில் குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடவுளின் மீது பாரத்தை போட்டு, குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.

சிவகாமி, உதயகுமார் எதிர்பார்த்தது போல் குழந்தை ஆரோக்கியமாகவே பிறந்தது. இதய நோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இருபின்னும், ரிப்போர்ட்டில் இதயத்தில் ஓட்டை இருப்பதாகவே தெரிவித்தது ஆனால் அது தானாக சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.






உங்களின் பங்களிப்பு 2 மாத குழந்தையை காப்பாற்ற உதவும்

சிவகாமி, உதயகுமார் எதிர்பார்த்தது போல் குழந்தை ஆரோக்கியமாகவே பிறந்தது. இதய நோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இருபின்னும், ரிப்போர்ட்டில் இதயத்தில் ஓட்டை இருப்பதாகவே தெரிவித்தது ஆனால் அது தானாக சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

"எங்கள் பிராத்தனை எதுவும் வீண்போகவில்லை என்று மகிழ்ந்தோம். என் அன்பு மகனின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடினமாக உழைத்து , அவனுக்காக எல்லாவற்றையும் சேமிக்கவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஒரே மாதத்தில், திடிரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டான், அந்த ஒரு நொடி, நான் என் குழந்தையை இழந்துவிடுவேனோ என்று பயந்தேன். இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் நடுங்குகிறது." - சிவகாமி

இதய அறுவை சிகிச்சை மட்டும் தான் குழந்தையின் உயிரை காப்பாற்ற ஒரே வழி
ஒரு மாத குழந்தையாக இருந்த போது குழந்தைக்கு திடிரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. பால் குடிப்பதற்கு கூட மிகவும் சிரமப்பட்டான். உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் இதயத்தில் இருக்கும் ஓட்டை பெரிதாகி கொன்டே இருப்பதாகவும் , உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார்கள்.
"என் குழந்தையின் வருங்காலத்தை குறித்து ஏராளமான கனவுகள் இருந்தது. ஆனால் இப்போது அவனின் உயிரை காப்பாற்றுவதை தவிர வேற எதுவும் இல்லை. பால் குடிக்க முடியாமல் தவிக்கிறான், அவனின் எடை குறைந்து கொன்டே வருகிறது, இரவெல்லாம் அழுது கொன்டே இருக்கிறான், ஆனால் ஒரு தாயாக, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. குற்றஉணர்ச்சியே என்னை கொன்றுவிடும் போல் இருக்கிறது. " - சிவகாமி

தங்களின் ஒரே மகனை காப்பாற்றுவதற்கு போதுமான பணமில்லாமல் தினம்தோறும் தவிக்கின்றனர்
உதயகுமார் ஒரு உணவகத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன நாளில் இருந்து இன்றுவரை தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார். பல நாட்கள் குழந்தையுடன் மருத்துவமனையில் இருப்பதால் , வேலைக்கு சரியாக போக முடியவில்லை. தனக்கு தெரிந்த எல்லாரிடமும் உதவி கேட்கிறார். ஆனால் அவர் வாங்கும் கடன், பயண செலவுக்கும் மாத்திரை வாங்குவதற்கும் , தனிசரி உணவுக்குமே சரியாக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு தேவையான 3 லட்ச ருபாய் என்பது அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
"நானும் என் மனைவியும், நன்றாக சாப்பிட்டு, தூங்கி ஒரு மாதம் மேல் ஆகிறது, எங்கள் குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? அறுவை சிகிச்சை செய்தால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று சொல்லி ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு பெற்றோர்கள் இல்லை, நாங்கள் காதல் திருமணம் செய்ததால் என் மனைவின் குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை. எங்களின் ஒரே சொத்து குழந்தை தான். ஆனால் அவனும் எங்களை விட்டு போய்விடுவானோ என்று பயமாக இருக்கு." - உதயகுமார்.

நீங்கள் உதவி செய்ய முடியும்
உதயகுமார் சிவகாமியின் 2 மாத குழந்தை இதய நோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யா விட்டால் இவர்கள், தங்களின் ஒரே குழந்தையை இழக்க நேரிடும். குழந்தையின் மூச்சு திணறல் அதிகமாகி கொன்டே போகிறது. உங்களின் உதவியால் குழந்தையை காப்பாற்ற முடியும்.உங்களின் பங்களிப்பு 2 மாத குழந்தையை காப்பாற்ற உதவும்