"என் மகனுக்கு, ஆபத்தான நோய் இருக்கிறது என்று தெரியும், மேலும் அவன் விரும்பும் விஷயங்களை நாங்கள் ஏன் தடுக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்கிறான். அவனுக்காக யாரும் வருந்துவது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் சில நேரங்களில், தாங்கமுடியாத வலி ஏற்படும்போது, இயேசுவின் படத்தின் முன்பாக , வலியிலிருந்து காப்பாற்றுமாறு தேம்பி தேம்பி அழுவான்." - சுரேஷ்.

இரத்தக் தொடர்பான ஒரு கொடூர நோய் ஷாமின் வாழ்க்கையை மிகவும் மோசமாக மாற்றிவிட்டது
அவனால் தன் சகோதரர் செல்வின்னுடன் விளையாடமுடியவில்லை. சிறிய காயம் கூட அவனை மிகவும் சிரமப்படுத்தும். ஷாமின் பெற்றோர்கள் எந்தொரு கூர்மையான பொருட்களையும் அவன் அருகில் வைப்பதில்லை. ஒரு சிறிய வெட்டு கூட கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கை தரும். இப்போது அவனால் செய்யமுடிவதெல்லாம் படங்கள் வரைவதும் படிப்பதும் தான். ஆனால் அதுவும் சில நேரங்களில் அதீத சோர்வினால் செய்ய முடிவதில்லை. ஏழை தொழிலாளியான சுரேஷ், கடந்த மூன்று மாதங்களாக தன்னுடைய மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். உடனடியாக எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் ஷாமின் உயிரை காப்பாற்ற முடியாது.
நாட்கள் செல்ல செல்ல ஷாம் மிகவும் பலவீனமாக காணப்பட்டான்
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள் , ஷாமின் ஈர்கள் முழுவதும் வெள்ளை நிறமாக இருந்ததை கவனித்தனர். அவனின் தோல் நிறமும் வெள்ளையாக மாறும்வரை அவர்களை அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஊட்டச்சத்து பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்து பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். ஆனால் எந்த மருந்துகளும் அவனின் உடல்நிலையை தேற்றவில்லை. திடிரென்று மயக்கமடைந்த போது, அவனின் பெற்றோர்கள் மிகவும் பயந்தனர்."பொதுவாக, பள்ளியில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஷாம் தனது துணிகளை மாற்றிக்கொண்டு அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் விளையாடுவான். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது - அவன் தூங்கிக்கொண்டே இருக்கிறான். எப்போதும் பசி பசி என்று சொல்லிக்கொண்டிருப்பான், ஆனால் இப்போது அவன் சாப்பிடுவது இல்லை. சில சமயம் என்னிடம் 'ஏன் என்னால் எதுவும் செய்யமுடிவதில்லை ' என்று கேட்பான். எல்லாம் சரியாகிவிடும் , நன்றாக பிரார்த்தனை செய்யும்படி சொல்வேன்"- ஜான்சி

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை இல்லாமல் ஷாமின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்த போது அவனின் பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்
ஷாமின் உடல்நிலை முன்னேறாதபோது, தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்து , பெரிய மருத்துவமனையில் எல்லா பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். ரத்த சோதனையில் ஷாமிற்கு அஃப்ளாஸ்டிக் அனீமியா (Aplastic Anemia) என்ற கொடூர நோய் இருப்பது தெரிய வந்தது. இந்த நோய், உடலில் புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதை நிறுத்தி வைக்கும். ரத்த மாற்றம் (blood transfusion) மூலமாக மட்டுமே ஷாமின் உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் சொன்ன போது அவனின் பெற்றோர்கள் மனமுடைந்து போனார்கள். மேலும் ரத்த மாற்றம் நிரந்திரமான தீர்வு இல்லை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டும் தான் இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்."நாங்கள் இருவரும் படித்ததில்லை, ஆனால் ஷாமின் உடல் போதிய இரத்தத்தை உற்பத்தி செய்யவில்லை என்று டாக்டர் விளக்கியபோது, நிலைமயின் தீவிரத்தை புரிந்து கொண்டோம். என் மகன் எப்போதும் ஆரோக்கியமாகவே இருந்தான். எப்படி திடிரென்று இந்த நோய் வந்தது என்பதை தான் எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு மருத்துங்கள் எடுத்துக்கொள்வதும், மருத்துவமனைக்கு வருவதும் பிடிக்காத ஒன்று. அதனால் நீண்ட நாட்களாக அவனின் நோயை பற்றிய உண்மையை மறைத்து வைத்தோம், ஆனால் அவனாகவே அதை தெரிந்து கொண்டான்."சுரேஷ், கண்களில் கண்ணீருடன்.

மூக்கு மற்றும் ஈறுகளில் கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு உள்ளது, ஆனால் கடவுள் மீது உறுதியான நம்பிக்கை அவனை காப்பாற்றும் என்று நம்புகிறான்
நோய் கண்டறிந்த நாள் முதல் ஷாம்யின் வாழ்க்கை மிகவும் கடினமாக மாறிவிட்டது. மூக்கு மற்றும் ஈர்களிலிருந்து தொடர்ந்து ரத்தபோக்கு இருந்து கொன்டே இருக்கிறது. கடுமையான காய்ச்சல், மேலும் முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனை தேற்றும் ஒரே விஷயம் அவனின் தாயின் அன்பான தழுவல் மற்றும் தினசரி பிரார்த்தனைகள் மட்டுமே. ஷாம் பள்ளியில் பிரச்சனைகளை எதிர்கொண்ட போதெல்லாம் - கடினமான பரீட்சை அல்லது நண்பர்களுடனான சண்டை போது கடவுள் எப்போதும்அவனுக்கு உதவினார்.அதுபோல் இந்த நோயை எதிர்த்து போராடுவதற்க்கும் கடவுள் உதவுவார் என்று நம்புகிறான். ஆனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இந்த சிறுவனின் நம்பிக்கை முழுவதும் பொய்யாக போய்விடும்.
"என் குழந்தை மிகவும் தைரியசாலி என்று நம்பினேன். ஆனால் இப்போது அவனது கண்களில் பயம் மட்டும் தான் பார்க்க முடிகிறது. ஆனால் அதை எங்களிடம் இருந்து மறைக்கிறான். எப்படியாவது சரியான நேரத்தில் அவனுக்கு அறுவை சிகிச்சை கிடைக்கும் என்று நம்புகிறேன்."

சுரேஷ் தனது மகனை இழக்க நேரிடும் என பயப்படுகிறார்
சுரேஷ் மிகக் குறைவான சம்பளம் வாங்கும் ஒரு ஏழை ஒப்பந்த தொழிலாளி.தன்னுடைய வருமானம் அடிப்படை வசதிகளுக்கே போதுமானதாக இல்லை. ஷாம் நோயால் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் சிரமப்படுகிறார். வாரந்தோறும் , ரத்த பரிமாற்றத்திற்கு மட்டுமே ருபாய் 7000 செலவாகிறது. அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் செலுத்துவது என்பது அவரின் சக்திக்கு அப்பாற்பட்டது.
ஷாம் தன்னுடைய சகோதரனுடன்
"ஷாமின் ரத்த பரிமாற்றத்திற்கு, தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி தான் செய்கிறேன். என் இரண்டாவது மகன் இப்போது பள்ளிக்கூடம் செல்வதில்லை, அதற்கான போதுமான பணம் என்னிடம் இல்லை. என் மகனின் உயிரை காப்பாற்ற எனக்கு உதவி வேண்டும். அவனை இழப்பதை என்னை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை."

உங்களால் உதவ முடியும்
10 வயதான ஷாம் கடுமையான ரத்த தொடர்ப்பன நோயால் பாதிக்கப்ட்டுள்ளான். அவனின் உடல் போதுமான புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதில்லை. உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவனின் உயிரை காப்பாற்ற முடியும். கூலி தொழிலாளியான தந்தை , தன் மகனின் உயிரை காப்பாற்ற மிகவும் சிரமப்படுகிறார். ஷாம் இந்த நோயிலிருந்து விடுபட, மீண்டும் பள்ளிக்குப் போய், சந்தோஷமாக இருக்க உங்களின் உதவி தேவை.உங்களின் பங்களிப்பு ஷாமின் உயிரை காப்பாற்ற முடியும்