முன்னாள் ஆசிரியர் தினக்கூலி செய்தும் தன் மகனை காப்பாற்ற முடியவில்லை | Milaap
முன்னாள் ஆசிரியர் தினக்கூலி செய்தும் தன் மகனை காப்பாற்ற முடியவில்லை
3%
Raised
Rs.56,411
of Rs.17,00,000
60 supporters
 • M

  Created by

  Milaap
 • S

  This fundraiser will benefit

  Srivarshan

  from Chennai, Tamil Nadu

Story

"ஒரு எம்.எஸ்சி பட்டதாரி போதிலும், என் மகனை காப்பாற்ற போராடுகிறேன், நான்  தினசரி சம்பள வேலையையும் செய்கிறேன். எக்காரணத்தை கொண்டும் என் மகனை இழக்க முடியாது" - சதீஷ். 1-வயது ஸ்ரீவர்ஷனின்  தந்தை.

பள்ளியில் ஆசிரியராக சத்திஷ் குமார் நியமிக்கப்பட்டபோது, அவரது மனைவி செல்வமதியுடன் ஒன்றாக கற்பனை செய்து வைத்த வாழ்க்கையை வாழ ஆவலுடன் இருந்தார்.  ஆனால் அவர்களது 5 மாத குழந்தையின் மரணம் சதீஷை மனச்சோர்வோடு தள்ளிவிட்டது, இதனால் அவருடைய வேலையை இழந்தார். எனினும், அவர்கள் இரண்டாவது குழந்தை, பேபி ஸ்ரீதர்சன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த போது மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் ஒருகொடூரமான திருப்பமாக,  குழந்தைக்கு ,எந்த நேரத்திலும் தனது உயிரை எடுக்க  கூடிய  நோய் கண்டறியப்பட்டது. சத்தீஷ் இப்போது தனது மகனை காப்பாற்ற போராடும் ஒரு தினசரி கூலி தொழிலாளி.
 குழந்தை பிறந்து  ஐந்தாவது மாதத்தில் இருந்து தொடர்ந்து மூச்சு திணறல் மற்றும் காய்ச்சலால்  போராடி வருகிறான்

எடை குறைவாக இருப்பது தவிர, குழந்தை ஸ்ரீவர்ஷனுக்கு  பிறக்கும் போது எந்த விதமான பிரச்சனையும் இல்லை. சத்தீஷ் மற்றும் செல்வமதி அவர்களது குழந்தை  ஆரோக்கியமாக வளரும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்தனர். ஆனால் ஸ்ரீவர்ஷன்  5 மாதங்கள் கழித்து, குளிர் மற்றும் அதிக காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். உடனே குழந்தையை  தர்மபுரி நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள், ஆனால் உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

"ஓசூர் மற்றும் வெல்லூரில் உள்ள சிறந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல நான் ஒரு பெரிய தொகையை கடனாக வாங்கினேன், ஆனால் மருத்துவர்கள் எப்போதும் குழந்தைக்கு  நிமோனியா என்று சொன்னார்கள். ஆனால்  சில மாதங்களுக்குள் பலவீனமாக, தோன்ற ஆரம்பித்ததால் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது. "- சதீஷ்

குழந்தை ஸ்ரீவர்ஷன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்

ஒரு நீண்ட வலிமிகுந்த  காத்திருப்புக்குப் பிறகு Combined Immuno Deficiency, என்ற நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது . வைரஸ்கள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா மூலம்  தொற்று நோயை ஏற்படுத்தி ,வெள்ளை இரத்த அணுக்களை பாதிக்கும்  ஒரு மரபணு கோளாறு ஆகும். இந்த நோய்க்கான ஒரே சிகிச்சையானது  எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஆகும், இல்லையென்றால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும்.


சென்னையில் ஒரு நல்ல மருத்துவமனையில்  ஸ்ரீவர்ஷன் அனுமதிக்கப்பட்டார். இந்த பிஞ்சு குழந்தையின்  வாழ்க்கை இப்போது 28 நாட்களில் ஒருமுறை நோய்த்தடுப்பு ஊசி மூலம் ஊடுருவி வருகிறது. ஒரு ஊசிக்கு ரூ. 14,000 க்கு செலவழிக்கிறார். சத்தீஷ் மருத்துவமனையில் இருக்கும் தெரியாதரவர்களிடம் கூட உதவி கேட்கிறார். இந்த ஊசி இல்லாமல் ஸ்ரீவர்ஷன்  ஒரு சிறிய தொற்றுநோய்க்கு கூட இறக்கலாம்."எங்கள் குழந்தை இந்த நோயால் கண்டறியப்பட்டதிலிருந்து, நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். சுத்தமான துணியை வைத்து தான் குழந்தையை தூக்குவோம். கைகளை கழுவாமல் ஒருமுறை கூட தொட்டதில்லை. கவனமாக இல்லையென்றால் இந்த குழந்தையும் நாங்கள் இழந்துவிடுவோம். அதனால் தான் மருத்துவமனையிலிருந்து எங்கையும் வெளியே எடுத்துசென்றதில்லை.  இங்கே தான் முதல் பிறந்த நாளைக் கொண்டாடினோம். நான் ஒரு கேக் வாங்கி வார்டுயில் இருக்கும் மற்ற பசங்களுக்கும் தந்தேன். அவன் அடுத்த பிறந்தநாள் வரை வாழ்கிறானா என்று எனக்குத் தெரியாது. "- சத்தீஷ், கண்களில் கண்ணீருடன்.


சத்தீஷ் தனது முதல் குழந்தை  இழந்த  அதிர்ச்சியில்  இருந்து மீள  முடியமால் தவிக்கும் போது தனது  இரண்டாவது குழந்தையையும்  இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறார்


ஸ்ரீவர்ஷன்  பிறந்த போது, சதீஷ் மீண்டும் தனது வாழ்க்கையை  உருவாக்கத் தீர்மானித்தார். நிலையான வேலையை கண்டுபிடித்து, அவரது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துக்கொள்ள எல்லா முயற்சியும் எடுத்தார். ஆனால் இப்போது  தனது குழந்தையின்  உயிரை  காப்பாற்றுவது மட்டுமே அவரின் ஒரே நோக்கம்."என் முதல் மகனை இழந்த நினைவுகள் என் மனதில் இன்னும் புதிதாகவே இருக்கின்றன. ஸ்ரீவர்ஷனும்  மரணத்தின் பிடியில் இருப்பதாக நான் சொன்னபோது என்னால் குற்றஉணர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. நான் என் குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க முயற்சி செய்கிறேன்,  நான் எந்த நொடியிலும் இழந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன், ஆனால் என் மகனை காப்பாற்ற என்னிடம் எந்த வழியும் இல்லை . "- சதீஷ்

இந்த குடும்பம் அந்நியர்களுடைய கருணையில் வாழ்கிறது, ஏனெனில்  தங்கள் குழந்தையை காப்பாற்றுவதற்கு ஏதுமில்லை

அவரது பாக்கெட்டில் 500 ரூபாய்க்கு குறைவாக தான் இருக்கிறது. சத்தீஷ் மற்றும் குடும்பத்தினர் நிலைமை பற்றி தெரிந்த  மருத்துவமனையில் உள்ள நண்பர்கள் மற்றும் அந்நியர்கள் உதவுகின்றனர். அவர் சென்னையில் வேலைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது  மனச்சோர்வுக்கான  அறிகுறிகளைக் செல்வமதியிடம்  கண்டபோது அவர் அதை கைவிட்டார். செல்வமதி யாரிடமும் இப்போது  பேசுவதில்லை.

"நான் தினசரி ஊதியத்திற்காக வேலை செய்து கொண்டிருந்தேன் ஆனால் என் மகன் அருகில்  எல்லா நேரத்திலும் நான் இருக்க வேண்டும் என்பதற்காக  இப்போது அதுவும் செய்ய முடியவில்லை. என்னிடம் இருந்த எல்லாவற்றையும் தந்துவிட்டேன்,  என் மகனை காப்பாற்ற எனக்கு உதவுங்கள். "- சதீஷ்


உங்களால் உதவ முடியும்

1 வயது குழந்தையான ஸ்ரீவர்ஷன் கொடுமையான நோயால் தாக்கப்பட்டுள்ளார்.   ஒரு சிறிய தொற்று நோய் கூட உயிருக்கு ஆபத்தாக முடியும்.  எலும்பு மஜ்ஜை மாற்றுதல் மட்டும் தான் ஒரே தீர்வு. ஆனால் அவரது தந்தை சதீஷ், ஆசிரியராக பணியாற்றியவர்  இன்று   ஒரு தின கூலி  வேலை செய்ய வேண்டிய கட்டாயம், இப்போது அதுவும் இல்லாத நிலையில் இருக்கிறார்.  அவசர உதவி கிடைக்கவில்லையெனில் அவர் இந்த குழந்தையையும் இழக்க நேரிடும்.

உங்களின் பங்களிப்பு ஸ்ரீவர்ஷனை காப்பாற்ற உதவும்

ஆதாரமான ஆவணங்கள்


  The specifics of this case have been verified by the medical team at the concerned hospital. For any clarification on the treatment or associated costs, contact the campaign organizer or the medical team.

ஸ்ரீவர்ஷனை காப்பாற்ற கிளிக் செய்யுங்கள்

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support