HELP PROVIDE OXYGEN TO THOSE IN NEED IN CHENNAI | Milaap
HELP PROVIDE OXYGEN TO THOSE IN NEED IN CHENNAI #Helpchennaibreathe
  • Samarpana

    Created by

    Samarpana
  • OT

    This fundraiser will benefit

    OXYGEN TO THOSE IN NEED IN CHENNAI

    from Chennai, Tamil Nadu

DONATE TO PROVIDE OXYGEN TO THOSE IN NEED IN CHENNAI
#Helpchennaibreathe

Namma Chennai needs us NOW. Our health infrastructure has been pushed to its limits to support the sheer volume of people suffering from the deadly second wave. Hospital corridors and ambulances are overflowing with people who are waiting for a bed with oxygen support. Our people are dying. Healthcare and frontline workers are overwhelmed.

This is why we at Samarpana would like to do our bit by offering aid to Government hospitals in Chennai. Through this fundraiser, we want to procure 420 oxygen cylinders with 420 regulators and trolleys, 240 oxygen concentrators, 120 high flow meter, 500 NRBC and oxygen masks etc.

Any amount will go a long way in determining whether a patient survives or not. Do donate however much you can and spread the word to as many people as possible. Our beautiful city and its people are counting on us. Together, we can do this!
_________

Samarpana is a government registered not for profit organisation
to uplift underprivileged and disadvantaged communities of society, and to promote India’s classical arts.

Throughout this pandemic, we have dedicated all our efforts to helping those that need it the most. Our fundraisers in the last 8 months have received overwhelming response. This has given us the strength to help the families of 2500 folk artists, provide assistance to 100 underprivileged families, ensure good quality education for 30 children with health complications, and also plant a 100 trees. Construction of urinals for a public school to provide hygienic facilities to the students is one of our recent, successful endeavours.

சென்னை வாழ் ஏழை எளிய மக்களுக்கு ஆக்ஸிஜன் அளித்து அவர் தம் உயிர்மூச்சைக் காத்திட உதவிட வேண்டுகின்றோம்.
#சென்னைக்கு உயிர்மூச்சளித்திடுவீர்
இந்த இரண்டாம் கோவிட் அலை காலத்தில் ஒவ்வொரு கணமும் மக்கள் உயிருக்குப்போராடி இறந்து வருகின்றனர்.பொது மருத்துவமனைகள் ஏழைகள் உயிர் மூச்சிற்காகவும் அடிப்படை மருத்துவ வசதிகளுக்காகவும் அச்சத்துடன் தவித்து காத்திருக்கும் அவலத்தால் நிரம்பி வழிகின்றன.
துரதிருஷ்ட வசமாக இவ்வளவு அதிக அளவிலான நோயாளிகளை ஒரே நேரத்தில் கவனிக்கத் தேவையான மருத்துவ வசதிகள் நம் மருத்துவமனைகளிடம் இல்லை. ஆக உதவிக்கான வழியின்றி மக்கள் தவித்தும் இறந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தான் சமர்ப்பணா அறக்கட்டளை பொதுமக்களின் ஆதரவுடன் அரசு மருத்துவமனைகளுக்கு அடிப்படை மருத்துவத் தேவைகளை சமாளிக்க உதவ விரும்புகின்றது.420 டிராலிகள்  ரெகுலேட்டருடன் கூடிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் 240 ஆக்ஸிஜன் கான்ஸன்டிரேடர் கருவிகளை உள் அனுமதி மற்றும் இடத்திற்காக காத்திருக்கும் கோவிட் பாதிப்பிற்கு உட்பட்ட ஏழை நோயாளிகளுக்கு அளிக்க விழைகிறது.
இந்த நிலையின் அவசரம் மற்றும் இத்தைகைய உதவியின் அவசியம் இவற்றைக்கருத்தில் கொண்டு தங்களாலான நிதி உதவி செய்து உயிர்களைக் காத்திட வேண்டுகின்றோம்.
தாங்கள் செய்திடும் சிறியதொரு நிதி பங்களிப்பும் இந்த பேரிடரிலிருந்து ஏழைகள் உயிர்த்து வந்திட பெரும்வழி வகுத்திடும்.
__________

சமர்ப்பணா ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற இலாப நோக்கற்ற அறக்கட்டளை ஆகும். 2019 ல் ஏற்படுத்தப்பட்ட இந்த அறக்கட்டளை ஒடுக்கப்பட்ட மற்றும் பின் தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை வளர்த்திடவும் அயராது உழைத்து வருகின்றது. இந்த பேரிடர் காலம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்ட பல்வேறு தரப்பினருக்கு முனைப்புடன் உதவி வந்துள்ளோம். கடந்த 18 மாதங்களில் பொதுமக்கள் நிதி உதவியுடன் நாங்கள் ஏற்பாடு செய்த நலத்திட்டங்கள் பெரிய நன்மதிப்பைப் பெற்றுள்ளன.2500 கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி 100 வசதிவாய்ப்பற்ற குடும்பத்தினர்க்கு உதவி 30 உடல் நல குறைபாடுள்ள மாணாக்கர்களுக்கு கல்வி நிதி உதவி 100 மரங்கள் நடுதல் என சீரிய கவனத்துடன் பணியாற்றி வந்துள்ளோம். ஒரு பொதுத்துறைப் பள்ளிக்கு போதிய கழிப்பறைகளைப் புதிதாக கட்டி தந்து உதவியது  அண்மையில் நாங்கள் நடத்திய நலத்திட்டமாகும்.

Read More

Know someone in need of funds? Refer to us
support