Help for poor priest | Milaap
Help for poor priest
  • Siva

    Created by

    Siva Kumar
  • C

    This fundraiser will benefit

    Chithra

    from tamilnadu

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருமுக்கூடல்பள்ளி கோவில், அப்பர் சாமியால் பாடல் பெற்ற தலம். இக்கோவிலில் அரச்சகராக இருந்த சங்கர குருக்கள்(93) வயது முதிர்வால் வருமானமின்றி தவித்து வருகிறார். உங்களால் முடிந்த உதவியை இந்த அந்தணர்க்கு செய்யுங்கள்.
குருக்கள் கூறியதாவது: எனது பெயர் சங்கர குருக்கள். எனக்கு இப்போது 93 வயதாகிறது. 3 தலைமுறையாக நாங்கள் கோவில் பணியாற்றி வருகின்றோம். எனது தாத்தா, அப்பா காலத்துக்குப்பின், 1962லிருந்து நான் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். முதன் முதலில் எனக்கு 21 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. பின் சிறிது சிறிதாக சம்பளம் அதிகரித்து ரூ.3 ஆயிரம் வரை தரப்பட்டது.

நான் எடுத்த முயற்சியால் கோவிலில் தண்ணீருக்காக போர் போடப்பட்டது. எனது காலத்தில் கோவிலுக்கு தேவையான நற்காரியங்கள் அனைத்தையும் செய்தேன். தற்போது எனக்கு உடல் நிலை சரியில்லை. கண்பார்வை மங்கி விட்டது. கடந்த 6 மாதமாக கோவிலில் நான் பூஜை செய்வதில்லை. வேறு அர்ச்சகர் அப்பணியை மேற்கொள்கிறார். தற்போது எந்த வருமானமும் இன்றி தவித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். தொடர்பு எண்: சித்ரா, மகள் - 8428607448

Read More

Know someone in need of funds? Refer to us
support