இந்த பேராசிரியர், ஆதரவற்றவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கிறார் | Milaap
இந்த பேராசிரியர், ஆதரவற்றவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கிறார்
  • Atchayam

    Created by

    Atchayam
  • AT

    This fundraiser will benefit

    Atchayam Trust

    from Erode, Tamil Nadu



லாக் டவுன் ஏழைகளை பாதித்துள்ளது முக்கியமாக ஆதரவற்றவர்களை மிகவும் பாதித்துள்ளது.  வேலை இல்லாத காரணத்தால் , பலர் தங்கள் வீட்டு வாடகையை செலுத்த முடியவில்லை, சரியான தங்குமிடம் மற்றும் சாப்பிட உணவு இல்லாமல் சாலைகளில் வசிக்கின்றனர்.  இதனால் தெருக்களில் தங்கும்  மக்கள் கணிசமாக உயர்ந்துள்ளனர்.
"ஆதரவற்றவர்களின்  எண்ணிக்கை அதிகமாகி கொன்டே போகிறது. பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். நான் கடந்த 7 ஆண்டுகளாக அவர்களின் மறுவாழ்வுக்காக பணியாற்றி வருகிறேன், இப்போது வரை 5500 பிச்சைக்காரர்களுக்கு மனநல ஆலோசனை, மருத்துவ சிகிச்சை, உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க முடிந்தது. இவர்களில், நாங்கள் 552 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம், அவர்களில் சிலர் தனியார் அமைப்புகளில் பணிபுரிகின்றனர், சிலர் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர் மற்றும் சில வயதானவர்கள் உடல் பாதுகாப்புக்காக முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். " - நவீன் .



இந்திய வீதிகளிலும் பொது இடங்களிலும் பிச்சைக்காரர்கள் அதிகளவில் காணப்படுகிறார்கள். பெரும்பாலும், அவர்களை  அணுகும்போது, இரண்டு விஷயங்களில் ஒன்றைச் செய்கிறோம் -  புறக்கணிக்கிறோம்  அல்லது அவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறோம் , அதனால் அவர்கள் நம்மைத் தனியாக விட்டுவிடுவார்கள். ஆனால், இது அவர்களின் நிலைமை மற்றும் இந்தியாவின் அதிகரித்து வரும் ஏழைகளின் பிரச்சினையை தீர்க்காது. தமிழ்நாட்டின் ஜே.கே.கே.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முழுநேர பேராசிரியரும், அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனருமான 26 வயதான நவீன் குமார் அதைத்தான் நினைக்கிறார்.



"நான் மிகவும் மோசமான பின்னணியில் இருந்து வந்தவன். எனது தினசரி இரவு உணவிற்கு எனக்கு ரூ .10 அல்லது 20 மட்டுமே வழங்கப்பட்டது. இதை நான் சந்தித்த பிச்சைக்காரர்களுக்குக் கொடுப்பேன். பல நாட்களில், என் பசி காரணமாக என்னால் தூங்க முடியவில்லை. முதியவர்கள் பிச்சை எடுப்பதை பார்க்கும் போதெல்லாம்,  நான் அவர்களை என் குடும்ப உறுப்பினர்களுடன் ஒப்பிடுவேன். அவர்கள் என் குடும்பமாக இருந்தால், நான் அவர்களை பிச்சை எடுக்க எப்படி அனுமதிப்பேன்? ", என்று அப்போது 19 வயது மட்டுமே இருந்த நவீன் கூறுகிறார்.

"என்னுடன் பணிபுரிபவர்கள் , மாணவர்கள் என்னை நோக்கி அலட்சியமாக செயல்படுவார்கள். நான் பிச்சைக்காரர்களைக் காப்பாற்றி உதவுவதால் எனது நண்பர்கள் என்னை தங்கள் வீட்டிற்கு அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் என்னை ஒரு பிச்சைக்காரன் என்று கூட அழைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னை அவமதித்து தீண்டத்தகாதவர்களைப் போல ஒதுக்கித் தள்ளினர்."



2014 முதல் உடல் ரீதியாக வேலை செய்யக்கூடியவர்களுக்கு வேலை வாய்ப்புகளை தருகிறார், சிறந்த வேலைகளைப் பெறவும், தங்கள் சொந்தக் காலில் நிற்கவும், புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் அவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கிறார்.

For many of these beggars, Naveen not only provides a chance at a better life but also an opportunity for a dignified death.
"We rescue those who need medical treatment, and for those who are too old and have no family of their own, to stay at our shelter. A beggar suffering from sickness on the streets, with no one to take care of him or her, usually get their body infested with worms and a strong stench, as the disease takes over them."



"Once a  beggar told me - 'Naveen, within three months I am also going to die due to my sickness. But, at least I will die in a good place and not rot away on the streets," says Naveen, while speaking to The Logical Indian.

"When I go and meet them in their new homes, they come and hug me. These are people who once thought they’d be on the road forever. And now seeing them live happily, is what helps me through even if there are any financial or any other problems."



மீட்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்கும், உண்மையிலேயே உதவி தேவைப்படும் பலருக்கு உதவுவதற்கும் நவீன் நிதி பற்றாக்குறையால் சிரமப்படுகிறார். அவர்களுக்கு தொடர்ந்து உதவுவதற்கு  உங்கள் ஆதரவு தேவை.

Read More

Know someone in need of funds? Refer to us
support