கல்லீரல் நோயிலிருந்து இந்த 6 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற 1 மாதம் தான் உள்ளது | Milaap
loans added to your basket
Total : 0
Pay Now

கல்லீரல் நோயிலிருந்து இந்த 6 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற 1 மாதம் தான் உள்ளது

ஜைனுலாபுதீன் - ஷெரின் தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் பெண் குழந்தை பிறந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அவர்களின் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. உயிரை பறிக்கும் 'பிலியரி அட்ரசியா' என்று அழைக்கப்படும் கல்லீரல் நோயால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்தது. 6 மாத குழந்தை  மார்வாலானிகா இன்னும் ஒரு மாதத்திற்குள்  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  மேற்கொள்ளாவிட்டால் உயிர் வாழ்வது சாத்தியமற்றதாகும்.

2 மாத குழந்தையாக இருந்தபோது 'கசாய்' என்றும் சிகிச்சை  மேற்கொண்டாள். ஆனால் அது பலனளிக்கவில்லை

மார்வா பிறந்த சில நாட்களுக்குள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டாள். அதன் பின்னர்  ICU வில் வைக்கப்பட்டு இரத்த பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள் எடுத்தனர். அதில் அவளுக்கு கல்லீரல் செயலிழப்பு மற்றும் 'பிலியரி அட்ரசியா' என்று அழைக்கப்படும்  நோய் உறுதியானது, அதாவது  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பித்தநீர் குழாய்கள் அசாதாரணமாக குறுகி அல்லது இல்லாமலே உள்ளன. 2 மாத குழந்தையாக இருந்தபோது 'கசாய்' என்றும் சிகிச்சை  மேற்கொண்டாள்.  ஆனால் ஒரு மாதத்திற்குள் தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு அதனால்   அவளது வயிறு வீக்கம் அடைந்தது. உடனடியாக அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் குறைந்த நோயெதிர்ப்பு காரணமாக தொடர்ந்து மருத்துமவமையில் இருந்தாள்.
 
குழந்தையின்  நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவளின்  உயிரை காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அறுவை சிகிச்சை ஒரு மாதத்திற்குள் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் மேலும் பல சிக்கல்கள் ஏற்படும்  என்று வலியுறுத்தினார். இப்போது வயிற்றுப்போக்கு , வாந்தி மற்றும் மிகவும் குறைந்த பசியினால் மார்வா அவதிப்படுகிறாள். அவளுடைய அம்மா தன் கல்லீரலை தானம் செய்கிறார். அவரது  கைகளில் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது ஆனால் துரதிருஷ்டவசமாக  இந்த சிகிச்சைக்கு  தேவையான  வசதி அவர்களிடம் இல்லை.

"எந்தவொரு பெற்றோருக்கும் இப்படியொரு  மோசமான நிலை வரக்கூடாது.என் மகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு மாதம் மட்டுமே எனக்கு இருக்கிறது, என்னுடைய இயலாமை என்னை கொல்கிறது"

நாட்கள் ஓடிக் கொண்டே  இருக்கிறது  ஆனால்  இன்னும் சிகிச்சைக்கு பணம் கட்ட முடியவில்லை 

மார்வா லானிகாவின் தந்தை ஒரு அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மருந்துகள், இரத்த பரிசோதனைகள் செலவுகள் அதிகரித்து கொண்டே போகிறது. உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்ந்து உள்ளனர். குழந்தையின் உயிரை காப்பற்ற இன்னும் ஒரு மாத காலம் தான் இருப்பதை எண்ணி, உணவும் தூக்கமும் இல்லாமல் தவிக்கின்றனர்.

“என்னிடம் இருந்த  எல்லாவற்றையும் நான் கொடுத்துவிட்டேன், எனக்கு தெரிந்த எல்லாரிடமும் உதவி கேட்டுவிட்டேன். வேறு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.. பணம் இல்லாத காரணத்தினால் கண் முன்னே குழந்தையை இழப்பது என்னால் தாங்கி கொள்ள முடியாது "

நீங்கள் எப்படி உதவ முடியும்?


மார்வா பிறந்த நாளிலிருந்து பல மாதங்கள் மருத்துவமனையில்  இருந்தாள்  . ஒரு மாதத்திற்குள்  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் வீட்டுக்கு அனுப்பபட்டாள் . அதிர்ஷ்டவசமாக, அவளுடைய அம்மாவின் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு  பொருத்தமாக  அமைந்துள்ளது ஆனால் சிகிச்சைக்கான பணம் அவர்களிடம் இல்லை. இதுவரை எல்லா செலவுகளையும் தன்னிடம்  உள்ளதை விற்றதோடு  கடன் வாங்கியும் சமாளித்து வந்தார் அவளின் அப்பா.  இப்போது கல்லீரல்  மாற்று சிகிச்சைக்காக ரூ 22 லட்சம் தேவைப்படுகிறது. உங்கள் நன்கொடை மட்டுமே இந்த குழந்தையை  காப்பாற்ற  முடியும்.

ஆதரவான ஆவணங்கள்
இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்

இந்த குழந்தையை காப்பாற்ற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்