சிகிச்சையின்றி, 14 வயது மாணவியின் உடல் முழுவதும் புற்று நோய் பரவி உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும் | Milaap
loans added to your basket
Total : 0
Pay Now

சிகிச்சையின்றி, 14 வயது மாணவியின் உடல் முழுவதும் புற்று நோய் பரவி உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்

"சங்கீதா பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவளுடைய கழுத்தில் ஒரு வீக்கம் இருந்தது , அது அதிக வெப்பம் காரணமாக இருக்கும்  என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் சில நாட்கள் சென்ற பிறகும் , வீக்கம் குறையவேயில்லை . இந்த சிறிய வீக்கம் உயிருக்கே ஆபத்தாக  முடியும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. மருத்துவரிடம் சென்ற போது, 'எதுவும் இல்லை எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன் , ஆனால் அதற்கு பதிலாக, என் மகளுக்கு  புற்றுநோய் உள்ளது என்றார் - புற்றுநோயை பற்றி திரைப்படத்தில் தான் பார்த்து இருக்கிறேன். எனக்கு படிப்பறிவு இல்லையென்றாலும் இந்த புற்று நோய் என் மகளை என்னிடமிருந்து பிரித்துவிடும் என்று தெரியும். "- சித்ரா, சங்கீதாவின் தாயார்.
சித்ரா மற்றும் குமரேசன் சங்கீதாவிடம் ,இனி  அவள் வீட்டிலிருந்தும், பள்ளியிலிருந்தும் தொலைவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று சொன்ன போது,  ஏதோ புரிந்துக்கொண்டதை போல் தலையாட்டினாள். வீக்கம் சரியான பிறகு வீடு திரும்பிவிடலாம் என்று சங்கீதா நினைத்தாள். ஆனால் பல வாரங்கள் கடந்து போனது, சங்கீதா இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறாள். துறுதுறுவென்று இருந்த 14 வயதான சங்கீதாவை இந்த கொடிய நோய் மிகவும் பலவீனமாக மாற்றியுள்ளது.  சில நாட்கள், அமைதியாக உட்காந்து கூரையை உற்று பார்த்து கொண்டிருப்பாள், மற்ற நாட்கள் வலியால் அழுதுகொண்டிருப்பாள். கீமோதெரபி இல்லாமல், சங்கீதா மீண்டும் வீட்டிற்கு செல்லமுடியாது .

சங்கீதாவிற்கு ஏற்பட்ட வலி முடிந்தது என்று நினைத்தபோது , புற்றுநோய் கண்டறியப்பட்டது


ஐந்து மாதங்களுக்கு முன்னர் சங்கீதா தனது கழுத்தில் இருக்கும் வீக்கத்தை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டாள். அதற்க்கு பிறகு அவளுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அவளது பெற்றோர் நினைத்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை முடிந்து  2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே  போல் வீக்கம் ஏற்பட்டது. அன்றிலிருந்து சங்கீதா உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள்."முதன் முறை வீக்கம் ஏற்பட்ட போது அது புற்றுநோய் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அவளை சென்னைக்கு கொண்டு வந்தபோதுதான் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இந்த ஓராண்டில் எங்கள் வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது.  இப்போது அதிகம் பேசமாட்டாள் , ஏதாவது பேசினால் அது புற்றுநோய்க்கு முன்னால் இருந்த வாழ்க்கை பற்றி தான் பேசுவாள். 'அம்மா, ஒரு நாள், ஐஸ் கிரீம் கடைக்கு அப்பா கூட்டிட்டு போனார் , அங்க திரும்பி போகணும் போல இருக்கு 'என்று நேற்று என்னிடம் கூறினாள். நான் அவளுக்கு முன்பாக அழுவதில்லை, ஆனால் நேற்று என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை . "

சங்கீதாவிற்கு  ஹாட்ஜ்கின்ஸ் லிம்ஃபோமா(Hodgkin’s Lymphoma) என்ற ஒருவகையான ரத்த புற்று நோய் உள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராட அவளுக்கு 8 மாதம் கீமோதெரபி தேவை. ஆனால் அவளை காப்பாற்றுவதற்கு பெற்றோரிடம் எதுவும் இல்லை.வேலை கிடைக்காத நிலையில், சங்கீதாவின் பெற்றோர் அவளைக் காப்பாற்ற போராடுகின்றனர்

சித்ரா, மருத்துவமனையில் சங்கீதாவுடன்  தங்கியுள்ள நிலையில், குமரேசன்  தினம்தோறும் ஏதோ ஒரு வேலையை  தேடிக்கொண்டிருக்கிறார். வேலை கிடைக்கும் நாட்களில் 400  ருபாய் வருமானம் வரும். ஆனால் இந்த பணம் அவர்களின் அடிப்படை தேவைக்கே போதுமானதாக இல்லை." மருத்துவமனையில் தங்க முடியாத நாட்களில் உறவினர் வீட்டில் வசிக்கிறோம். அவர்களுக்கு பாரமாக இருப்பது போல் இருக்கிறது ஆனால் இப்போது  ஒவ்வொரு ரூபாயும் சேமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் எதுவும் போதவில்லை. அடுத்த  8 மாதங்களுக்கு கீமோதெரபி பெற 10 லட்சம் தேவைப்படுகிறது. நாட்கள் சென்று கொன்டே இருக்கிறது எங்களால் இன்னும் சிகிச்சையை தொடங்குவதற்கான பணத்தை கட்ட முடியவில்லை."

உங்களால் உதவ முடியும்

புற்றுநோய், 14 வயதான சங்கீதாவை  மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது, ஆனால் மனரீதியாக சங்கீதா தைரியமாகவும் வலுவாகவும் இருக்கிறார். எனினும், அவளுடைய வலிமை அவளை காப்பாற்ற போதுமானதாக இல்லை.  புற்றுநோய்க்கு எதிராக  போராட கீமோதெரபி 8 மாதங்களுக்கு தேவைப்படுகிறது. சங்கீதாவை காப்பாற்ற பெற்றோர்கள் போராடி வருகின்றனர் ஆனால் அவர்களால் முடியவில்லை.உங்களின் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உங்களின் பங்களிப்பு சங்கீதாவின் உயிரை காப்பாற்ற முடியும்


Supporting Document

The specifics of this case have been verified by the medical team at the concerned hospital. For any clarification on the treatment or associated costs, contact the campaign organizer or the medical team.

சங்கீதாவை காப்பாற்ற கிளிக் செய்யவும்

support-sangeetha