COVID Relief Fund for Folk Artist Thangarasu | Milaap
COVID Relief Fund for Folk Artist Thangarasu
51%
Raised
Rs.25,520
of Rs.50,000
7 supporters
  • SS

    Created by

    Sankar Sundaram
  • T

    This fundraiser will benefit

    Thangarasu

    from Tirunelveli, Tamil Nadu

Story

Covid-19 has been devastating for lots of people around the world and has affected the livelihood of many. Folk artists are one among them, they struggle for their living as they lost all of their opportunities to perform. As a result, their families are not having income for the past several months.

Thangarasu, a folk street artist who played a father role in the movie Pariermperumal has also been affected by this current situation. He was applauded by many for his extraordinary acting. Although, now it is reported that he doesn’t have a proper house to live in and is surviving on porridge from his neighbors. He used to live in Tirunelveli, but his house was washed away in a recent flood. The district collector has offered to support rebuild the house. While he is waiting to receive the funds, some of his well-wishers are helping him with rehabilitation, and at this moment, he does not have a roof for his house and need funds to reconstruct his home. Thangarasu’s daughter is the first generation in his family to go to school, and even in this difficult situation, she is studying Master of Arts through a distance education program. Now, the next new lockdown will make their situation even worse, so Mr. Narampu Nathan join secretary of "Tamilnadu Progressive Writers and Artists Association" is providing support as much he is able to make things better. Any small contribution will help Thangarasu and his family for everyday living.

Below message from Mr. Narumpunathan's own word. 

நாட்டுப்புறக் கலைஞன்
நெல்லை தங்கராசு
-----------------------------------------
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்
2020-க்கான 'நாட்டுப்புறக் கலைச்சுடர்' விருது நெல்லை தங்கராசுவிற்கு வழங்கப்பட இருக்கிறது. அவரிடம் இந்த தகவலைத் தெரிவித்து வாழ்த்து சொல்லுங்கள் என பொதுச்செலாளர் ஆதவன் தீட்சண்யா கூறியதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்குக் கிளம்பினேன். பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள இளங்கோ நகரில் அவர் இருக்கிறார் என்பது தெரியும், வீடு துல்லியமாக எங்கே உள்ளது எனத் தெரியாது.

தோழர் முருகன் கண்ணாவிற்குத் தெரியும் என்பதால் அவரைத் தொடர்பு கொண்டேன். "தோழர், அவரிடம் செல்லு இருக்கு ஆனா, தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தால் எடுக்க மாட்டாரு.. நேரில் போய் தகவலைச் சொல்லிருங்க.. காலைல 6 மணிக்கு வீட்டை விட்டுக் கெளம்புனார்னா ராத்திரி 8 மணிக்குத்தான் வருவாரு.." என்றார்.

நேற்று இரவு 7.15 மணிக்கு அங்கே சென்று, எனது நண்பர் கணேசன் (SBI) அவர்களையும் அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றேன். இளங்கோ நகரின் எல்லையையும் கடந்து, நாலைந்து முக்குகளைக் கடந்து, கீழத் தெருவில் இருந்த ஒரு குடிசை வீட்டின் முன்பு போய் நின்றார். சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வாசலில் தெருக்கூத்து கலைஞர் தங்கராசு அவர்களும் (பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பரியின் அப்பாவாக வருவாருல்லா... அவரே தான்) அவரது மனைவியும் உட்கார்ந்திருந்தனர். அவரிடம் விருது செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். ரொம்ப சந்தோசப்பட்டார்.

பேசிக் கொண்டிருக்கும்போதே, குடிசையை நோட்டமிட்டேன். இருண்ட மூலையில் ஒரு பழைய கட்டில்.. வலதுபுறம் அடுப்பாங்கரை.

"சொந்த வீடுதாம். போன மழைல இடிஞ்சு போயிட்டு.. கட்டைக்குத்து வீடு." என்றபடி இடிந்து போயிருந்த வீட்டைக் காண்பித்தார். குடிசையின் பின்புறம் இருந்த அந்த வீடு இருளடைந்து போயிருந்தது. 40 வருடங்கள் தெருக்கூத்துக் கலைஞனாக பெண் வேசமிட்டு ஆடிவரும் அந்த உன்னதக் கலைஞன், இடிந்த குட்டிச்சுவர் மீது அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க மனசு என்னவோ செய்தது.

"வீட்டை ரிப்பேர் பார்த்தாச்சுன்னா, கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.. எப்ப வழி பிறக்குதோ தெரியல" வேதனைப்பட்டார் தங்கராசு. அவரது மனைவி பேச்சிக்கனி அவர்களுக்கும் அதே கவலைதான். "ஒரே பொண்ணு எம்.ஏ. கரஸ்ல படிக்கிறாள், டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கா சார்.." என்றார்.

விழாவிற்கு அடுத்த மாசம் பதிமூனாந்தேதி ஞாபகமா வந்துருதேன் என உற்சாகமாக சொன்னார். விடைபெறும்போது கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.

"எங்கும் புகழ் துவங்க...
இங்கு நானும் நான் துவங்க..
அன்னையான சுந்தரியே, ஞானதங்கமே!
பறக்க விட்டுத் தேடலாமோ
தேவதையைக் காணோமே"...

தங்கராசு பெண் வேசம் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்... சுழன்று சுழன்று ஆடுகிறார்... இடிந்துபோன வீடு, சொகமில்லாத மனைவி எதுவும் அந்தக் கலைஞனின் கண்களுக்குத் தெரியவில்லை.
உருமி முழங்க, கையைப்பிடித்துக் கொண்டே...

"கதைகதையாய் தினமுரைத்தாய்..
கதைசொல்லி முடிக்குமுன்னே
ஞானதங்கமே!
கண்ணீர் கடலில் கலந்துட்டியே
ரத்தினமே, கண்ணம்மா"...

தங்கராசு ஆவேசமாக ஆடுகிறார். நான் வீடுதிரும்பும் வழியெங்கும் பாடலும் கூத்தும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன...

- இரா.நாறும்பூநாதன்
துணைச்செயலாளர், தமுஎகச மாநிலக்குழு

Read More

support