விபத்தில் சிக்கிய மாமன் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி வேண்டுகிறேன் | Milaap
விபத்தில் சிக்கிய மாமன் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி வேண்டுகிறேன்
8%
Raised
Rs.83,695
of Rs.1,000,000
52 supporters
 • K

  Created by

  Karthick
 • PA

  This fundraiser will benefit

  P Anbarasan

  from Karur, Tamil Nadu

Story

எனது பெயர் தி. கார்த்திக். எனது மாமா மகன் பி. அன்பரசனுக்காக நிதி திரட்ட வந்துள்ளேன். 27 வயதான அன்பரசன் தனது பெற்றோருடன் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் வசிக்கிறார். அன்பரசன் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 23.04.2021 அன்று அன்பரசனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில் வலது தோல்பட்டை, கை, விரல்கள், மற்றும் காலில் பல்வேறு இடங்களில் மிக பலமாக அடிப்பட்டு 10 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதிலும் வலது கால் முழுமையாக சிதைந்து உடலில் இருந்து வலது காலை அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவால் வலது காலை சரிபடுத்த மிகவும் போராடி வருகின்றனர் . தற்போது வரை, எங்கள் சேமிப்பு மற்றும் கடன்களிலிருந்து 6, 00, 000/- வரை மருத்துவ செலவு செய்து உள்ளோம். ஏழை விவசாயியான அன்பரசன் தந்தையால் இனி வரும் மருத்துவ சிகிச்சைக்கு  தேவைப்படும் பத்துலட்சம் (10, 00, 000 /-) ரூபாய் பணத்தை திரட்ட இயலாத காரணத்தால் உங்களது பேராதரவை வேண்டுகிறேன். உங்களால் இயன்ற எந்தவொரு பங்களிப்பும் எங்களுக்கு பேருதவியாக அமையும். உங்கள் உதவியும், ஊக்கமும், ஆசிர்வாதமும் ஒரு இளைஞனின் எதிர்காலத்தை காத்திட பேருதவியாக இருக்கும். இந்த பிரச்சார இணைப்பை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து கொண்டு உதவிட வேண்டுகிறேன்.

Read More

Know someone in need of funds for a medical emergency? Refer to us
support