FIGHT AGAINST HUNGER | Milaap
FIGHT AGAINST HUNGER
1%
Raised
Rs.11
of Rs.9,911,000
1 supporter
  • A

    Created by

    AMIRTHANANDHAVANAM
  • Mp

    This fundraiser will benefit

    Marginal people

    from Tiruvannamalai, Tamil Nadu

Story

இந்த இக்கட்டான கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயிருக்கிறது.
தங்களின் அன்றாட வாழ்க்கையை கடக்க முடியாத அளவிற்கு பொருளாதார சுழலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
அனைத்து வளங்களையும் நிரம்பபெற்ற எம் தேசத்தின் மக்கள் இன்று  ஏழ்மை மற்றும் வறுமையின் பிடியில் சிக்குண்டு, அடுத்தவேளை உணவிற்கும் அடுத்தவரை எதிர்நோக்கி காத்திருக்கும் அவலநிலை.
என்று மாறும்  இந்த பெருந்தொற்றின் வேகம்,என்று தீரும் இந்த பசிப்பிணியின் கோரம்.
 "ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" உங்களின் கண்முன்னே பசியாலும், இல்லாமையாலும்,இயலாமையாலும் ஏங்கித்தவிக்கும் எளிய மனிதர்களின் துயர் தீர்க்க இயன்ற வரை முயற்ச்சியுங்கள்.
வருந்தும் உயிர்க்கு இறங்கும் மனிதன்  இறைவனாகிறான்    “இறைவனாக வாருங்கள் ” 
உண்மை ஞானத்தை உலகிற்கு உணர்த்திட, பசிப்பிணி அறுத்து வற்றாத அட்சய பாத்திரமாய் விளங்க இருக்கிற, தமிழகத்தின் தர்மசாலாவாகவும், வருங்கால உலகின் ஜீவகாருண்ய தலைமை இடமாகவும் அன்பின் உறைவிடமாகவும், வரும் காலங்களில் “அமிர்தானந்தவனம்” பல்லாயிரம் பேரின் பங்களிப்புடன்  அழகிய ஆன்மீக பேராற்றல் செறிந்த கிராமமாக உருவாக்கப்பட இருக்கிறது.
அமிர்தானந்த வனமானது முன்னோர்களின் கலை இலக்கியம் கல்விமுறை பண்பாடு கலாச்சாரம் ஆன்மீகம் அறிவியல்,சூழலியல், மருத்துவம் உணவுமுறை வாழ்வியல் மற்றும் தொல்லியல் துறைகளின் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக விளங்கும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது
அமிர்தானந்த வனமானது இயற்கை அன்னையின் மடியில்,மனிதன் மட்டுமல்லாது  அனைத்து உயிர்களும் இனக்கமாகவும், இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே வாழும் வகையிலும், வாழும்போதே சொர்க்கத்தை உணரும் வகையிலும், உருவாக சித்தமாயிருக்கிறது
தங்களிடம் எல்லாமும் இருக்கிறது ஆனால் வாழ்வில் நிம்மதியும்,மகிழ்ச்சியும் இல்லாமல் இருக்கிறது என்றும்,ஏழ்மை வறுமையினால் துன்பத்திலேயே உழன்று கொண்டு இருப்பவர்கள்,மனம் முடங்கி போனவர்கள், மனம் உடைந்து போனவர்களின் மறுவாழ்வு மையமாக விளங்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
வருந்தும் உயிர்க்கு இறங்கும் மனிதன் இறைவனாகிறான்’’ ஆதலால் உங்கள் கண் முன்னே இயலாமையானாலும்,இல்லாமையினாலும் துன்புறுகிற மக்களின் துயர் தீர்க்க இயன்றவரை முற்படுங்கள்.மேலும்,அவர்களின் வாழ்வை வளமாக்கிட தங்களால் இயன்ற பங்களிப்பின் மூலம் அமிர்தானந்த வனத்தின் கரங்களை வழுப்படுத்துங்கள். 
                                     நன்றி !  

Read More

Know a similar organisation in need of funds? Refer an NGO
support