Help Aditya Study At LSE. ஆதித்யா LSEல்‌ படிக்க உதவுங்கள். | Milaap
Help Aditya Study At LSE. ஆதித்யா LSEல்‌ படிக்க உதவுங்கள்.
19%
Raised
Rs.1,87,677
of Rs.10,00,000
83 supporters
  • Anonymous

    Created by

    Aditya
  • A

    This fundraiser will benefit

    Aditya

    from Chennai, Tamil Nadu

Story

உலகெங்கும் பரவி வாழும் பெருமைமிகு தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்! உங்கள் பொன்னான நேரத்தில் எனக்கு ஓரிரு நிமிடங்கள் தருமாறு வேண்டுகிறேன்.

என் பெயர் ஆதித்யா. நான் BA Hons Political Science (அரசியல் அறிவியல்) 
கடைசி ஆண்டு பயின்று வருகிறேன். 

எம் இன வரலாற்றின் தாக்கத்தினாலோ என்னவோ, எனக்கு அரசியல் மீதும், குறிப்பாக தேசிய இனங்களின் விடுதலை மீதும் பேரார்வம் சிறு வயதிலேயே இருந்து வந்தது. 

இதன் நீட்சியாக 12ஆம் வகுப்பு CBSE தேர்வில்  அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றேன். மொத்த மதிப்பெண் 500ல், நான் 493 மதிப்பெண்கள் எடுத்து, 98.6% பெற்றிருந்தேன் (வரலாறு பாடத்தில் 100/100). 

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள பிரதான கல்லூரியான இந்து கல்லூரியில் இடம் கிடைத்தது. இக்கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியல் அறிவியல் படித்து வருகிறேன். 

இந்த மூன்று வருடங்களும், கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், தமிழ் இன மேம்பாட்டிற்காக என்னால் இயன்றவரை உழைத்து வருகிறேன். குறிப்பாக தமிழீழத்தில் நடந்து வரும் தமிழருக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளை 'தமிழ் கார்டியன்'  (Tamil Guardian) என்ற ஆங்கில செய்தியகத்தின் ஊடாக உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் திண்ணமாக செயல்பட்டு வருகிறேன். 

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் வரலாறுகளை ஆழமாக படித்து தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் ஒரு சர்வதேச ஊடகத்தில் பணி புரிய வேண்டும் என்பது தான் என் வாழ்க்கை இலட்சியம். 

இந்த குறிக்கோளை அடைய பேருதவி ஆற்றும் வகையில், உலக பிரசித்தி பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸ் (London School of Economics) பல்கலைக்கழகத்தில் உலக அரசியல் (MSc International Relations) படிக்க எனக்கு admission கிடைத்துள்ளது. 


அந்த கல்வியை பெற Tuition Fees மற்றும் Living expenses இரண்டையும் சேர்த்து ஏறக்குறைய 40 லட்சம் ரூபாய் (இந்திய காசில்) தேவைப்படுகிறது. எனது தந்தை வெகுகாலமாக வேலையின்றி இருக்கிறார். என்னையும் என் உடன்பிறந்த இரு  மூத்த சகோதரிகளையும் எங்கள் தாயார் தான் தனது அரசு வேலை ஊடாக காப்பாற்றி வருகிறார். 


என்னை LSEக்கு அனுப்புவதற்காக சேலத்தில் இருக்கும் எங்கள் ஒரே சொந்த வீட்டை என் அம்மா வங்கியில் அடகு வைத்து 30 லட்சம் ரூபாய் வரை தயார் செய்துவிட்டார். மீதி பத்து லட்சம் ரூபாய்க்கு நான் என் தமிழ் உறவுகளையே நம்பி உள்ளேன். 

தங்களால் இயன்ற அளவிற்கு ஒரு தொகையை வழங்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனது மேல்படிப்பு தொடங்கவிருக்கிறது. July 31க்குள் உங்கள் காணிக்கைகளை செலுத்துமாறு வேண்டுகிறேன்.

உங்கள் பணம் ஒரு எளிய தமிழ் மகன் உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெற பயன்படும். இவ்வளவு நேரம் செலவிட்டு என் கோரிக்கையை படித்ததற்கு நன்றி! 

வாழ்க தமிழ், வெல்க தமிழினம்!

ஆதித்யா. 

தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள: prasannaditya01@gmail.com அல்லது +91 7824017577 என்கிற இலக்கத்தில் அழைக்கலாம். 
 

Read More

support